
Last Updated:
சோதனை ஓட்டத்தின்போது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது.
தெலங்கானா, ஒடிசா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் புதிய ரயில் திட்டங்களுக்கு டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தெலங்கானாவில் சர்லபள்ளி புதிய ரயில் முனையத்தைவும் அவர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய ரயில்வே ஒரு வரலாற்று மாற்றத்தைக் கண்டுள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் ரயில் சேவை அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
50க்கும் அதிகமான வழித்தடங்களில் இயக்கப்படும் 136 வந்தே பாரத் ரயில்களால், மக்களின் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளதாக மோடி தெரிவித்தார்.
சோதனை ஓட்டத்தின்போது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதை குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று கூறினார்.
January 06, 2025 9:18 PM IST

