
Last Updated:
Sugar price | நாட்டில் மிகப்பெரிய அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சர்க்கரை உற்பத்தி அளவானது நடப்பு 2024-25 சந்தை ஆண்டின் முதல் காலாண்டில் (அக்டோபர்-செப்டம்பர்) 34.35 லட்சம் டன்னிலிருந்து 32.80 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சர்க்கரை உற்பத்தியில் சரிவு ஏற்பட்டதன் காரணமாக நடப்பு சந்தை ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில், இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி சுமார் 16% குறைந்து 95.40 லட்சம் டன்னாக உள்ளதாக இந்திய சர்க்கரை மற்றும் பயோ-எனர்ஜி உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்து உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தைவிட 18 லட்சம் டன் குறைவாகும்.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் நாட்டில் இருக்கும் சர்க்கரை ஆலைகள் 113 லட்சம் டன் சர்க்கரையை உற்பத்தி செய்திருந்தன. இந்த நிலையில்தான் தொழில்துறை அமைப்பான ஐஎஸ்எம்ஏ வெளியிட்டிருக்கும் தரவுகளின்படி, அக்டோபரில் தொடங்கிய தற்போதைய மார்க்கெட்டிங் இயரின் முதல் காலாண்டில் சர்க்கரை உற்பத்தி 16% சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொழில்துறை அமைப்பான Indian Sugar and Bio-Energy Manufacturers Association (ISMA) கூற்றுப்படி உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் க்ரஷ்ஷிங் ரேட் (crushing rate) கடந்த ஆண்டை விட சிறப்பாக உள்ளது. எனினும், டிசம்பர் 2024 கடைசி வாரத்தில் உத்தரப்பிரதேசத்தில் பெய்த மழை காரணமாக கரும்பு விநியோகத்தில் தற்காலிக இடையூறு ஏற்பட்டதால், கரும்பை நசுக்கி சர்க்கரை எடுக்கும் வீதம், அதாவது க்ரஷ்ஷிங் ரேட் பாதிக்கப்பட்டது.
நாட்டில் மிகப்பெரிய அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சர்க்கரை உற்பத்தி அளவானது நடப்பு 2024-25 சந்தை ஆண்டின் முதல் காலாண்டில் (அக்டோபர்-செப்டம்பர்) 34.35 லட்சம் டன்னிலிருந்து 32.80 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
அதேபோல், நாட்டின் இரண்டாவது பெரிய உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிராவில் ஓராண்டுக்கு முன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்ட அளவான 38.20 லட்சம் டன்னிலிருந்து. சமீபத்தில் 30 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. அதே சமயம் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் 24.91 லட்சம் டன்னிலிருந்து 20.40 லட்சம் டன்னாக சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது.
இதையும் படிக்க: ரூ.6,700 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்ப வரவில்லை: ரிசர்வ் வங்கி
உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் உற்பத்தி குறைவாக இருப்பதும், பெரிய அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் உள்ள 18க்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலைகளில் க்ரஷ்ஷிங் ப்ராசஸ் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததுமே நாட்டில் சர்க்கரை உற்பத்தி குறைவதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் சர்க்கரை ஆலைகள் காலதாமதமாக திறக்கப்பட்டதே, கடந்த ஆண்டைவிட மொத்த சர்க்கரை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வித்தியாசத்துக்கு காரணம்.
தற்போது தொழிற்சாலைகளில் க்ரஷ்ஷிங் பணி நடந்து வருவதாகவும், இதனால் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தொழில் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் தற்போதைய உற்பத்தி குறைவால் சர்க்கரை விலையில் இதன் தாக்கம் எதிரொலிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: Credit Score: கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன…? கிரெடிட் ஸ்கோரை அதிகரிப்பதற்கான வழிகள் என்னென்ன…?
ஜனவரி இறுதிக்குள் சர்க்கரை உற்பத்திக்கான இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை ISMA வெளியிடும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே 2024-25 சந்தைப்படுத்தல் ஆண்டில் (marketing year) உள்நாட்டு சர்க்கரை நுகர்வு 280 லட்சம் டன்னாக குறையும் என்று தொழில்துறை அமைப்பு கணித்துள்ளது.
January 05, 2025 12:40 PM IST

