• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பார்டர் கவாஸ்கர் கோப்பை: இந்திய அணி தோல்வியடைந்தது ஏன்?

GenevaTimes by GenevaTimes
January 6, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
பார்டர் கவாஸ்கர் கோப்பை: இந்திய அணி தோல்வியடைந்தது ஏன்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், 2ஆவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்ற நிலையில், மழை காரணமாக 3ஆவது ஆட்டம் டிராவில் முடிந்தது. கடைசி இரண்டு டெஸ்ட்களில் வெற்றியை வசமாக்கிய ஆஸ்திரேலிய அணி, 10 வருடங்களுக்குப் பின் பார்டர் கவாஸ்கர் கோப்பையைக் கைப்பற்றியது. தோல்வியடைந்த இந்திய அணிக்கு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும் வாய்ப்பு நழுவியது. இந்திய அணி பேட்டிங்கில் ஜொலிக்காததே தோல்விக்கான முக்கிய காரணமாக அமைந்தது.

குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தத் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் மற்றும் கடைசி போட்டிகளில் விளையாடாத நிலையில், அவர் 3 டெஸ்ட் போட்டிகளில் 31 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 3 பந்துவீச்சாளர்களை விட அவரது சராசரி குறைவாக இருந்தது, இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை ஐந்து போட்டிகளில் சேர்த்து ஜெய்ஷ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு சதம், இரண்டு அரை சதம் உள்பட 391 ரன்களைச் சேர்த்தார்.

அதற்கு அடுத்தபடியாக ஒரு சதத்துடன் 298 ரன்களை எடுத்து நிதிஷ்குமார் ரெட்டி இரண்டாவது பிடித்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளாசிக் கே.எல். ராகுல், ரன் மெஷின் விராட் கோலி பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பந்த் அவ்வப்போது அதிரடி காட்டினாலும், வெற்றிக்கு உதவவில்லை.

பந்துவீச்சைப் பொறுத்த வரையில், ஒற்றை ஆளாக ஆஸ்திரேலிய அணியை அச்சுறுத்தினார் ஜஸ்பிரித் பும்ரா. ஐந்து போட்டிகளில் அவர் 9 இன்னிங்ஸ்களில் பவுலிங் செய்த அவர், 32 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பிஷன் சிங் பேடியின் 47 ஆண்டுகால சாதனையையும் முறியடித்தார்.

அடுத்தபடியாக இந்திய அணியில் சிராஜ் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஒரே போட்டியில் மட்டும் விளையாடிய பிரஷித் கிருஷ்ணா 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நிதிஷ்குமார் 5 விக்கெட்டுகளையும் 2 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை ஆகாஷ்தீப்பும் கைப்பற்றினர்.

போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பயிற்சியாளர் கவுதம் கம்பீர், டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி மற்றும் ரோஹித்தின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

Also Read | TN Assembly | உரையை வாசிக்காமலேயே வெளியேறிய ஆளுநர் – சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

“எந்த வீரரின் எதிர்காலம் குறித்தும் என்னால் பேச இயலாது. அது அவர்களின் கையில் உள்ளது. ஆனால் அவர்களுக்கு இன்னும் பசியும், ஆர்வமும் உள்ளது என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும். அவர்களால் இந்திய கிரிக்கெட்டை மேலும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று நம்புகிறேன். எனினும், ஒவ்வொருவரும் தங்களின் ஆட்டம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.” என்றார் கவுதம் கம்பீர்.

இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் தோல்விகளால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

January 06, 2025 10:14 AM IST

Read More

Previous Post

பாட்னாவில் பிரசாந்த் கிஷோர் கைது

Next Post

தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்! இன்றைய விலை நிலவரம் எவ்வளவு?

Next Post
தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்! இன்றைய விலை நிலவரம் எவ்வளவு?

தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்! இன்றைய விலை நிலவரம் எவ்வளவு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin