விவசாயிகள் நிலம் தந்தார்கள்
விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், விக்கிரவாண்டியில் மாநாட்டுக்கு 27 ஏக்கர் நிலம் பத்தாது என்று சொன்ன போது, விவசாயிகளும், இந்த ஊர் மக்களும் கொடுத்து உதவினார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ’தளபதிக்காகதானே’ என்று சொல்லி விவசாயிகள் நிலம் தந்தார்கள். தமிழக மக்களுக்கு எப்போதும் தளபதி அவர்கள் நன்றி உள்ளவராக இருப்பார். அந்த நல்ல எண்ணத்தில் வரக்கூடிய தலைவர்தான் எங்கள் தளபதி.

