• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

‘தெற்கு லெபனானில் இருந்து வெளியேறுங்கள்’ – ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை | withdraw from southern Lebanon Israel warns Hezbollah ceasefire collapse

GenevaTimes by GenevaTimes
January 5, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
‘தெற்கு லெபனானில் இருந்து வெளியேறுங்கள்’ – ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை | withdraw from southern Lebanon Israel warns Hezbollah ceasefire collapse
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெல் அவிவ்: லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள லித்தானி ஆற்று பகுதியை ஒட்டி முகாமிட்டுள்ள படையினரை திரும்ப பெற வேண்டும் என ஹிஸ்புல்லாவை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. இல்லையென்றால் போர் நிறுத்த ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்படும் நிலை இருப்பதாக எச்சரித்துள்ளதாகவும் தகவல்.

அண்மைய காலமாக ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் என இரு தரப்பிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு வருவதாக ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் தான் ஞாயிற்றுக்கிழமை அன்று இஸ்ரேல் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

லெபனான் நாட்டில் முகாமிட்டுள்ள இஸ்ரேல் படைகள், படிப்படியாக வெளியேறும் என்றும், மீண்டும் ஹிஸ்புல்லா அமைப்பின் மறுகட்டமைப்பை தடுக்கும் வகையில் அந்த நாட்டின் தெற்கு பகுதி பாதுகாப்பினை ராணுவம் உறுதி செய்ய வேண்டும் என்பது தான் போர் நிறுத்த ஒப்பந்தம்.

“லெபனான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்படுத்த இஸ்ரேல் உறுதியாக உள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் முதல் நிபந்தனையாக உள்ள தெற்கு லெபனானின் லித்தானி ஆற்று பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் இருந்து ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பை முழுவதுமாக அகற்றுவது; அந்த நாட்டு ராணுவம் பாதுகாப்பினை உறுதி செய்வது போன்றவை இன்னும் நடக்கவில்லை” என ஞாயிற்றுக்கிழமை அன்று இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு கட்டுப்படுவதா இல்லையா என்பதை தங்கள் அமைப்பு தான் முடிவு செய்யும் என சனிக்கிழமை ஹிஸ்புல்லா தலைவர் நைம் காசிம் தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் – லெபனான் மோதல் ஏன்? சுதந்திரப் போரின் தொடக்கத்தில் (1948), இஸ்ரேலுக்கு லெபனான் ஒரு பிரச்சினையை உருவாக்கியது. இந்தப் போரில் லெபனான் ராணுவம் அரபுப் படைகளுக்கு ஆதரவளித்தது. பாலஸ்தீன விடுதலை அமைப்பு (பிஎல்ஓ) உருவாக்கப்பட்டு லெபனானில் போராளிகளை பணியில் அமர்த்தியதும் பிரச்சினை மேலும் தீவிரமானது. தொடர்ச்சியாக இஸ்ரேலுக்கு இன்னொரு அச்சுறுத்தலாக 1982-ல் ஈரானின் புரட்சிகரக் காவலர்களால் ஹிஸ்புல்லா படை லெபனான் மண்ணில் நிறுவப்பட்டது. கடந்த 2000-மாவது ஆண்டு தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற இந்தப் படை வழிவகுத்தது.

ஹிஸ்புல்லாக்களின் கொரில்லா தாக்குதல்கள் உலகமே கண்டு அஞ்சிய தாக்குதல் உத்தியாக பிரபலமானது. அப்போது தொடங்கி இஸ்ரேலுக்கு பெரும் சவாலாகவே இந்த ஹிஸ்புல்லாக்கள் இருக்கின்றனர். “பாலஸ்தீனிய நிலங்களை ஆக்கிரமித்து இஸ்ரேல் தன்னை ஒரு நாடாக நிறுவிக்கொண்டது. அது ஒரு சட்டவிரோத நாடு. இஸ்ரேல் இல்லாத அரபு பிராந்தியம் வேண்டும்” என ஹிஸ்புல்லா விரும்புகிறது. இதனால் அவ்வப்போது இஸ்ரேல் – ஹிஸ்புல்லாக்களுக்கு இடையே மோதல்கள், தாக்குதல்கள் நடப்பது தொடர்கதையாகவே இருக்கிறது.

இஸ்ரேல் நீண்ட காலமாக ஹிஸ்புல்லாவை அதன் எல்லைகளில் மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதுகிறது. நாளுக்கு நாள் அது வளர்ந்து பயங்கர ஆயுதக் குழுவாக உருவாகி வருவது இஸ்ரேலுக்கு கவலையளிப்பதாக இருக்கிறது. மேலும், சிரியாவில் அது வலுவாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதை இஸ்ரேல் தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதுகிறது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக இஸ்ரேல் போர் நடவடிக்கையை தொடங்கி தீவிரப்படுத்தி உள்ளது. இந்த போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், ஈரானின் கோரிக்கையை இஸ்ரேல் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வரும் லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பு மூலம் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டது. இதற்கு இஸ்ரேல் தரப்பும் பதிலடி கொடுத்தது. அதில் கடந்த செப்டம்பர் மாதம் பேஜர், வாக்கி-டாக்கி வெடிப்புத் தாக்குதலை இஸ்ரேல், லெபனானில் நடத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நிர்வாகிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.



Read More

Previous Post

சிபிஎம் கட்சிக்கு புதிய மாநில செயலாளர் தேர்வு!கே.பாலகிருஷ்ணன் சொன்ன வார்த்தையால் நடந்த மாற்றம்!

Next Post

நஜிப் போராட்டத்தில் சேர வேண்டாம் என்று அம்னோ உறுப்பினர்களுக்கு ஜாஹிட் எச்சரிக்கை – Malaysiakini

Next Post
நஜிப் போராட்டத்தில் சேர வேண்டாம் என்று அம்னோ உறுப்பினர்களுக்கு ஜாஹிட் எச்சரிக்கை – Malaysiakini

நஜிப் போராட்டத்தில் சேர வேண்டாம் என்று அம்னோ உறுப்பினர்களுக்கு ஜாஹிட் எச்சரிக்கை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin