திமுகவை சாடிய கே.பாலகிருஷ்ணன்!
முன்னதாக ஜனவரி 3ஆம் தேதி நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசிய கே.பாலகிருஷ்ணன், திராவிட மாடல் என்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு இடதுசாரி மாடல்தான் சரியாக இருக்கும். பாஜக வீழ்த்தும் போராட்டத்தில் திமுகவுடன் இணைந்து தயக்கமின்றி பணியாற்றுவோம். ஆனால் திமுக அரசு, தொழிலாளர்கள், விவசாயிகள் உரிமைகளை பறிக்கும்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றாத போது திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்போம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடன படுத்திவிட்டீர்களா? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது என பேசி இருந்தார்.

