புதிய பொருளாதாரக் கொள்கை, மதவெறி, ஆளுநருக்கு எதிர்ப்பு, மாநில உரிமைகள், மனித உரிமை, கருத்துச் சுதந்திரம், சாதிய ஒடுக்கு முறை, தீண்டாமைக் கொடுமைகள், பெண்கள் – – குழந்தைகள் மீதான வன்முறை, சிறுபான்மை யினர் மீதான வன்முறை, வீடுகளை அப்புறப் படுத்துதல், வாழ்விடப் பிரச்சினைகள், வீட்டு மனைப் பட்டா, கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணம், பெரம்பலூர் சிறுமி தற்கொலை, விழுப்புரம் பாலியல் கொடுமைகள், வேங்கை வயல், நாங்குநேரி மாணவன் தாக்குதல், விழுப்புரம் கோவில், சங்கராபுரம் பிரச்சினை, திருவண்ணா மலை மாரியம்மன் கோவில், சேலம் பெரிய மாரியம்மன் கோவில் நுழைவு – ஆகிய போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்தியதாக பாலகிருஷ்ணன் மார்தட்டிக் கொள்கிறார். பின்னர், அவரே போராட்டம் நடத்த உரிமை இல்லையா என்றும் கேட்கிறார். இதில் எது ஒரிஜினல் கே.பி.? என முரசொலி விமர்சனம் செய்து இருந்தது.

