• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Jasprit Bumrah | “பும்ரா ஸ்கேன் செய்ய மருத்துவமனை செல்லவில்லை…”

GenevaTimes by GenevaTimes
January 5, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
Jasprit Bumrah | “பும்ரா ஸ்கேன் செய்ய மருத்துவமனை செல்லவில்லை…”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 05, 2025 12:21 PM IST

பும்ரா சிட்னியில் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது பயிற்சி கூட செய்யாததால், இந்திய அணி பும்ராவின் காயம் குறித்து முழு உண்மையை தெரிவிக்கவில்லை என்று பாண்டிங் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

பும்ரா

சிட்னி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்காதது பல இந்திய ரசிகர்களையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.

பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு தூணாக இருந்த அவர், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சனிக்கிழமை நடைபெற்ற போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரசித் கிருஷ்ணா, “அவருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளது. ஸ்கேன் பரிசோதனைக்காகச் சென்றுள்ளார். மருத்துவக் குழுவின் அறிக்கைக்குப் பிறகு அவர் தொடர்ந்து விளையாடுவாரா இல்லையா என்பது தெரியவரும்,” என்று கூறினார்.

இதையும் படிக்க: சொதப்பிய இந்திய அணி..! 10 வருடங்களுக்கு பிறகு பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இழந்தது..! WTC வாய்ப்பும் பறிபோனது

இந்த நிலையில், சில முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும், பத்திரிகையாளர்களும் வேறுவிதமாகக் கருத்து தெரிவித்தனர். முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், இது ஒரு மூடிமறைக்கும் முயற்சி என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்துத் தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் பீட்டர் லாலர், சிட்னி கிரிக்கெட் மைதானத்திலேயே இந்திய அணிக்கு ஸ்கேன் செய்யும் வசதி இருந்ததாகவும், பும்ரா வலி நிவாரணி ஊசி போட்டுக்கொள்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

“எனக்குக் கிடைத்த தகவலின்படி அவர் ஸ்கேன் செய்யச் செல்லவில்லை. ஆடை மாற்றும் அறையிலேயே ஸ்கேன் செய்யும் கருவிகள் உள்ளன. அவர் ஊசி போட்டுக்கொள்ளத்தான் மருத்துவமனைக்குச் சென்றார்” என்று மூத்த பத்திரிகையாளர் பீட்டர் லாலர் தெரிவித்தார்.

பும்ரா சிட்னியில் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது பயிற்சி கூட செய்யாததால், இந்திய அணி பும்ராவின் காயம் குறித்து முழு உண்மையைத் தெரிவிக்கவில்லை என்று பாண்டிங் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

“இது எனக்கு இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகத் தோன்றுகிறது. அவர் மைதானத்திற்குத் திரும்பியபோது முதுகு வலி என்று சொன்னார்கள். ஆனால் அவர் படிக்கட்டுகளில் ஓடி ஏறினார். மைதானத்தை விட்டு ஓடிச் சென்றார். இவை முதுகு வலியின் அறிகுறிகள் அல்ல. அவர் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மன அழுத்த முறிவு போல நீண்ட காலம் விளையாடாமல் இருக்கக் கூடாது என்றும் விரும்புகிறேன்,” என்று ரிக்கி பாண்டிங் கூறினார்.

பும்ரா கடந்த 2023 ஆம் ஆண்டில் முதுகில் ஏற்பட்ட மன அழுத்த முறிவுக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் காரணமாக ஆசிய கோப்பை 2022, டி20 உலகக் கோப்பை 2022 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உட்பட பல முக்கிய போட்டிகளில் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

First Published :

January 05, 2025 12:21 PM IST

Read More

Previous Post

பள்ளி முடிந்து வீடு சென்ற சிறுமி மீது கட்டை விழுந்து பலி!

Next Post

இறந்துபோன தன் குட்டியைச் சுமந்தபடி கடலில் சுற்றும் திமிங்கிலம் ; மனதை நெகிழ வைக்கும் தாய்ப்பாசம் | Makkal Osai

Next Post
இறந்துபோன தன் குட்டியைச் சுமந்தபடி கடலில் சுற்றும் திமிங்கிலம் ; மனதை நெகிழ வைக்கும் தாய்ப்பாசம் | Makkal Osai

இறந்துபோன தன் குட்டியைச் சுமந்தபடி கடலில் சுற்றும் திமிங்கிலம் ; மனதை நெகிழ வைக்கும் தாய்ப்பாசம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin