
Last Updated:
விபத்தை தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் ஏராளமானோர் கங்குலியை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்தனர்.
கார் மீது பேருந்து மோதிய விபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் மகள் லேசான காயம் அடைந்தார். நூலிழையில் அவர் இந்த விபத்தில் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு டோனா என்ற மனைவியும், சனா என்ற ஒரே மகளும் உள்ளார். 23 வயதாகும் அவர் லண்டன் பல்கலைக் கழகத்தில் பொருளாதார பட்டப்படிப்பு முடித்து, உயர் நிறுவனத்தில் இன்டர்னாக இருந்து வந்தார்.
இந்நிலையில், ஓட்டுனருடன் அவர் சென்ற கார் கொல்கத்தா டயமண்ட் ஹார்பர் சாலையில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து ஒன்று கங்குலி மகள் சென்ற காரின் மீது பலமாக மோதியது. நல்வாய்ப்பாக, இதில் சனாவுக்கு பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை.
விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். அவரை கார் ஓட்டுனர் விரட்டிச் சென்று பிடித்து போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
இதேபோன்று காருக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்றும், இது தொடர்பாக கங்குலி மகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. நேற்று மாலை ஏற்பட்ட இந்த சம்பவம் இன்றுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையும் படிங்க – சீனாவில் பரவும் HMPV வைரஸ்! மருத்துவர் ஜோஷி தரும் விளக்கம்
விபத்தை தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் ஏராளமானோர் கங்குலியை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்தனர். 52 வயதாகும் கங்குலி இந்திய அணிக்காக 113 டெஸ்ட், 312 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
1996 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான அவர் 2008 இல் ஓய்வு பெற்றார்.
January 04, 2025 3:37 PM IST

