
Last Updated:
முன்னதாக கடந்த 26 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக ஐ.ஆர்.சி.டி.சி தளங்கள் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முடக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று மீண்டும் முடங்கியுள்ளது. இதனால் இன்று IRCTC Down என்ற வார்த்தைகள் சமூக வலைளதங்களில் ட்ரெண்டானது.
விடுமுறை தினங்களையொட்டி டிக்கெட் முன்பதிவு கடுமையாக அதிகரித்ததால் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மற்றும் மொபைல் ஆப் ஸ்தம்பித்தது. இதையடுத்து தொழில்நுட்ப கோளாறு சரி செய்த பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.
புத்தாண்டு விடுமுறையையொட்டி ஏராளமானோர் ரயில்களில் பயணம் செய்வதற்கு டிக்கெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். சாதாரண நாட்களிலேயே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு கடும் போட்டி காணப்படும். இந்நிலையில் இன்று காலை சுமார் 10.17 மணியளவில் மிக அதிகமானோர் டிக்கெட் புக்கிங் மற்றும் கேன்சலில் ஈடுபட்டனர்.
இன்னும் சிலர் பிரீமியம் தட்கல் டிக்கெடை ஏசி வகுப்புகளுக்காக எடுக்க முற்பட்டனர். அளவுக்கு அதிகமான யூசர்கள் செயல்பாடு காரணமாக ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மற்றும் மொபைல் ஆப் ஸ்தம்பித்து போனது. இதுகுறித்து ஒரு மணி நேரத்திற்கு டிக்கெட் புக்கிங் மற்றும் கேன்சல் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக கடந்த 26 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக ஐ.ஆர்.சி.டி.சி தளங்கள் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முடக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று மீண்டும் முடங்கியுள்ளது. இதனால் இன்று IRCTC Down என்ற வார்த்தைகள் சமூக வலைளதங்களில் ட்ரெண்டானது.
தட்கல் டிக்கெட் விலை புக்கிங் செய்யும் நேரத்தில் இணையதளம் முடங்கியுள்ளது. இயல்பு நிலைக்கு திரும்பும் போது டிக்கெட்டுகள் இல்லாவிட்டால் யார் அந்த டிக்கெட்டுகளை புக்கிங் செய்திருப்பார்கள்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இன்னும் சிலர் இந்த விவகாரத்தில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இணையதளம் முடங்கியது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி தரப்பில் எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
December 31, 2024 4:07 PM IST

