வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சில இராணுவப் பாதுகாப்பு அரண்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சூழ்ச்சி
நடக்கலாம் எனவே பாதுகாப்புத் தரப்புகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தான் நந்திக் கடலில் போர் முடிவுக்குக்
கொண்டுவரப்பட்டது இதனால் சர்வதேச ரீதியில் அவர் எதிர்கொண்ட அழுத்தங்கள்
ஏராளம்.
போர் இவ்வாறு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும் எமது நாட்டில்
குழப்பத்தை ஏற்படுத்த சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன, உயிர்த்த ஞாயிறு தினத்
தாக்குதல் சம்பவம் கூட இதன் ஓர் அங்கம்தான்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டதால் மகிந்தவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்
இல்லை என்று எவராலும் கூற முடியாது எனவே மகிந்தவைப் பாதுகாக்க வேண்டியது
எமது இனத்தின் கடப்பாடாகும்.
76 ஆண்டு கால சாபத்துக்கு முடிவுகட்டத்தான் அநுரவை ஜனாதிபதியாக்கினார்கள் எனவே, அவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

