• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Mann Ki Baat: “உலகில் தமிழ் மொழி கற்போர் எண்ணிக்கை அதிகரிப்பு”

GenevaTimes by GenevaTimes
December 29, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
Mann Ki Baat: “உலகில் தமிழ் மொழி கற்போர் எண்ணிக்கை அதிகரிப்பு”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:December 29, 2024 3:30 PM IST

Mann Ki Baat: அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டு 75 ஆண்டுகள் நிறைவு பெறுவது நமக்கெல்லாம் பெருமை எனவும் அவர் தெரிவித்தார்.

News18

உலகம் முழுவதும் தமிழ் மொழியை கற்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

117வது மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் என்பது இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் பெருமை என்றார். கடந்த மாதம் ஃபிஜி நாட்டில், இந்திய அரசின் துணையுடன் தமிழ் மொழியை கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டதாகவும், கடந்த 80 ஆண்டுகளில் முதன்முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஃபிஜி நாட்டில் தமிழ் மொழியை கற்றுக் கொடுக்கின்றனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

தமிழ் மொழி மற்றும் பாரம்பரியத்தைக் கற்றுக் கொள்ள ஃபிஜி நாட்டு மக்கள் காட்டும் ஆர்வம் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

முன்னதாக, அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையைப் படித்து வீடியோவைப் பதிவிட நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். அப்போது, காலத்தின் பல சோதனைகளைத் தாண்டி, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நம்மை வழிநடத்தும் ஒளியாக இருப்பதாக அவர் கூறினார்.

அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டு 75 ஆண்டுகள் நிறைவு பெறுவது நமக்கெல்லாம் பெருமை எனவும் அவர் தெரிவித்தார். மக்கள் மத்தியில் அரசியல் அமைப்பு சட்டத்தைக் கொண்டு செல்வதற்காகத் தனி இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், அதில் பல்வேறு மொழிகளில் அரசியலமைப்பு சட்டம் இடம் பெற்றுள்ளது என்றார்.

Also Read | ராமதாஸ் உடன் பேசியது என்ன? – அன்புமணி விளக்கம்

மன் கி பாத் நிகழ்ச்சியைக் கேட்பவர்கள், பள்ளி, கல்லூரி குழந்தைகள், இளைஞர்கள் அனைவரும் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையைப் படித்து, இணையதளத்தில் வீடியோவைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

ஜனவரி 13ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள மகா கும்ப மேளாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். அதில் கலந்து கொள்ளும் போது, சமூகத்தில் உள்ள பிரிவினையையும், வெறுப்புணர்வையும் ஒழிக்க உறுதியெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

December 29, 2024 3:30 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || சிவனொளிபாத மலை சென்ற பெண் உயிரிழப்பு

Next Post

WTC Final : உலகக் கோப்பை டெஸ்ட் பைனலில் நுழைந்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியா முன்னேற வாய்ப்பு இருக்கா?

Next Post
WTC Final : உலகக் கோப்பை டெஸ்ட் பைனலில் நுழைந்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியா முன்னேற வாய்ப்பு இருக்கா?

WTC Final : உலகக் கோப்பை டெஸ்ட் பைனலில் நுழைந்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியா முன்னேற வாய்ப்பு இருக்கா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin