
December 29, 202410:44 AM IST
Tamil Live Breaking News: ராமதாஸை சந்திக்கும் முன்னாள் எம்.எல்.ஏ
அன்புமணி கூறிய தகவலை சொல்வதற்காக முன்னாள் சேலம் எம்.எல்.ஏ கார்த்தி தற்போது தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளார்.
நேற்று பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே வார்த்தைப்போர் நடைபெற்றது. இதையடுத்து நேற்று இரவு 10:30 மணிக்கு ராமதாஸை முன்னாள் சேலம் எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையான குழு சந்தித்தது.
இதையடுத்து பனையூரில் அன்புமணியை சந்தித்த இந்த குழு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் அன்புமணி விதித்த நிபந்தைகளையும், தகவல்களையும் கூற இந்த குழு மீண்டும் ராமதாஸை சந்திக்க வந்துள்ளது.

