• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Manmohan Singh Funeral | முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு சீக்கிய மதப்படி இறுதிச் சடங்கு… 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம்

GenevaTimes by GenevaTimes
December 28, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
Manmohan Singh Funeral | முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு சீக்கிய மதப்படி இறுதிச் சடங்கு… 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:December 28, 2024 2:10 PM IST

Manmohan Singh Funeral | மறைந்த மன்மோகன் சிங்கிற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

News18

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு சீக்கிய மதப்படி நடந்த இறுதிச் சடங்கில் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் நேற்று முன் தினம் இரவு காலமானார். டெல்லி மோதிலால் நேரு சாலையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல் இன்று காலை 9 மணியளவில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. கட்சி கொடியை சோனியா காந்தி மன்மோகன் சிங்கின் உடல் மீது வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். இதேபோன்று மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் மன்மோகன் சிங்கின் உடல் வைக்கப்பட்டு மயானத்தை நோக்கி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதே வாகனத்தில் ராகுல் காந்தியும் கவலை தோய்ந்த முகத்துடன் பயணம் மேற்கொண்டார். மயானம் வரை வழிநெடுக மன்மோகன் சிங் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு

காலை 11.30 மணியளவில் இறுதி ஊர்வலம் நிகம்போத் காட் மயானத்தை அடைந்தது. அங்கு மன்மோகன் சிங் உடலுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

அதன்பின் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், பூட்டான் மன்னர் ஜிக்மி ஹிசர் உள்ளிட்டோர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க : மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு ஏன் இன்று நடைபெறவில்லை..?

பின்னர் முழு அரசு மரியாதை மற்றும் சீக்கிய மதப்படி மன்மோகன் சிங் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. மன்மோகன் சிங் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதியாக 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் எரியூட்டப்பட்டது.

First Published :

December 28, 2024 2:10 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Manmohan Singh Funeral | முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு சீக்கிய மதப்படி இறுதிச் சடங்கு… 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம்

Read More

Previous Post

அஜர்பைஜான் விமான விபத்து: காரணத்துடன் மன்னிப்பு கோரிய புடின்

Next Post

நெட்பால் போட்டியில் தமிழக அணி வெற்றி | Tamil Nadu team wins in netball match

Next Post
நெட்பால் போட்டியில் தமிழக அணி வெற்றி | Tamil Nadu team wins in netball match

நெட்பால் போட்டியில் தமிழக அணி வெற்றி | Tamil Nadu team wins in netball match

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin