• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வித்திட்ட மன்மோகன்! | about manmohan contributed to the country economic progress was explained

GenevaTimes by GenevaTimes
December 28, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வித்திட்ட மன்மோகன்! | about manmohan contributed to the country economic progress was explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அப்போதைய பிரதமர் நரசிம்​ம​ராவ் தலைமையிலான மத்திய அமைச்​சர​வையில் நிதி​யமைச்​சராக மன்மோகன் சிங் பணியாற்றினார். அப்போது தாராளமய​மாக்​கத்​தின் மூலமாக நாட்​டின் பொருளாதாரத்தை அவர் வளர்ச்சி பாதை​யில் கொண்டு சென்​றார். எந்த தொழில் செய்​தா​லும் உரிமம்பெற வேண்​டும் என்ற முறையை அவர் குறைத்​தார். விதி​முறைகளை ஒழுங்​குபடுத்தி, தொழில் துறை​யில் அரசு தலையீட்டை குறைத்​தார். இது தொழில்​துறைக்கு உத்வேகம் அளித்​தது.

மேலும் வர்த்தக சீர்​திருத்​தங்களை மன்மோகன் சிங் அறிமுகப்​படுத்​தினார். இறக்​குமதி வரியை குறைத்து, திறந்​தவெளி சந்தை பொருளா​தா​ரத்தை ஏற்படுத்​தினார். நாட்​டின் முக்கிய துறை​களில் அவர் அந்நிய நேரடி முதலீட்டை அனும​தித்​தார். அவர் கொண்டு வந்த சீர்​திருத்​தங்​களால் நாடு தொடர்ந்து பலன் அடைந்து பொருளா​தா​ரத்​தில் முன்னேற்றம் கண்டது.

இந்திய ரூபா​யின் மதிப்பு குறைந்த​போதும், அதை இந்தியா​வின் ஏற்றும​திக்கு சாதக​மாக்கி ஏற்றுமதி திறனை ஊக்கு​வித்​தார். வரியை எளிமை​யாக்க அவர் வரி சீர்​திருத்​தங்களை கொண்டு வந்து, வரி அமைப்பை விரிவுபடுத்​தினார். இதனால் அவரது காலத்​தில் நாட்​டின் பொருளா​தாரம் வளர்ச்​சி​யடைய தொடங்​கியது. கடந்த 1991-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி அவர் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்​த​போது, ‘‘நான் கொண்டு வரும் சீர்த்திருத்​தங்கள் அமல்​படுத்​தப்​படும்​போது, நாட்​டின் பொருளா​தாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்​பும்’’ என நாடாளு​மன்​றத்​தில் நம்பிக்கை​யுடன் அவர் கூறினார்.

நாட்​டின் பிரதமராக மன்மோகன் சிங் பொறுப்​பேற்ற போது, நாடு நிலையான பொருளாதார வளர்ச்​சியை கண்டது. அவரது முதல் ஆட்சி​யில் நாட்​டின் ஆண்டு சராசரி வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக இருந்​தது. 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை நாட்​டின் வளர்ச்சி வீதம் சுமார் 6.7 சதவீதம் என்ற அளவில் இருந்​தது.

கடந்த 2008-ம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்​ட​போதும், இந்திய பொருளா​தா​ரத்தை குறைந்த பாதிப்புடன் அவர் கொண்டு சென்​றார். தீவிரமான எதிர் சுழற்சி நடவடிக் கைகளை மன்மோகன் சிங் அரசு மேற்​கொண்​டது. இந்திய ரிசர்வ் வங்கி நிதி கொள்​கைகளை வெகுவாக தளர்ச்சி, உள்நாட்டு தேவையை அதிகரிப்​ப​தற்கான நிதி நடவடிக்கைகளை மேற்​கொண்​டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உத்தரவாத திட்​டத்​தை​யும் மன்மோகன் சிங்​தான் அறிமுகப்​படுத்​தினார். இத்திட்டம் கிராமத்​தில் உள்ளவர்​களுக்கு 100 நாள் வேலை​வாய்ப்பை உறுதி செய்​த​தால், இது கிராமப்புற மக்களின் ஏழ்மையை ஒழித்து, அவர்​களின் வாழ்​வா​தா​ரத்தை மேம்​படுத்​தி​யது.

மக்கள் நலத்​திட்​டங்கள் மக்களை சென்​றடைவ​தில் பல சிக்​கல்கள் இருந்​த​தால், மக்களின் வங்கி கணக்​கில் நேரடியாக பணம் செலுத்​தும் முறை கொண்டு​வரப்​பட்டு தற்போது வெற்றியடைந்​துள்ளது. இதற்கு மன்மோகன் சிங் முன் முயற்​சி​யால் தொடங்​கப்​பட்ட ஆதார் திட்​டம்​தான் அடிப்​படையாக அமைந்​தது. மக்கள் நலத்​திட்​டங்​களில் ஆதார் மிக முக்​கிய​மானதாக மாறியது.

இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற சிவில் அணுசக்தி ஒப்பந்​தத்​தி​லும் மன்மோகன் சிங் முக்கிய பங்காற்றினார். இதற்கு எதிர்க்​கட்​சிகள் அப்போது கடும் எதிர்ப்பு தெரி​வித்தன. அப்போது அணு சக்தி பற்றி பேசிய மன்மோகன் சிங், ‘‘சி​வில் அணுசக்தி நடவடிக்கை நாட்டுக்​கும், உலகத்​துக்​கும் நல்லது.

நிலையான வளர்ச்சி, எரிசக்தி பாது​காப்பை நோக்கி நாம் செல்​லும்​போது, ஆக்கப்​பூர்​வமான செயல்​களுக்கு அணு சக்தியை பயன்​படுத்து​வது​தான் சிறந்​தது’’ என்றார். நாட்​டின் நி​தி​யமைச்​சராக​வும், பிரதம​ராக​வும், மன்​மோகன் சிங் பணி​யாற்றிய ​காலம், இந்​திய பொருளா​தா​ரத்​தில் மிகப் பெரிய ​மாற்​றத்தை ஏற்​படுத்​தியது . அவரது தொலைநோக்கு ​கொள்​கைகள் நவீன இந்தியா​வின்​ பொருளா​தார வளர்​ச்​சிக்​கு அடித்​தள​மாக அமைந்​தன.



Read More

Previous Post

Tamil Live Breaking News: Live : சென்னை கோயம்பேட்டில் தேமுதிகவினர் மறியல்

Next Post

காலநிலை மாற்றத்தால் 2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவு: ஆய்வறிக்கை | Climate change led to 41 additional days of extreme heat in 2024: new report

Next Post
காலநிலை மாற்றத்தால் 2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவு: ஆய்வறிக்கை | Climate change led to 41 additional days of extreme heat in 2024: new report

காலநிலை மாற்றத்தால் 2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவு: ஆய்வறிக்கை | Climate change led to 41 additional days of extreme heat in 2024: new report

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin