யாழ்ப்பாணத்தில் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோப்பாய் மத்தி பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி இடம்பெறுகின்றது என யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்துச் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், இருவரைக் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 10 லீற்றர் சட்டவிரோத மதுபானத்தையும் மீட்டனர்.
மீட்கப்பட்ட சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்ட நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காகக் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். (a)

