• Login
Wednesday, August 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அஸ்வினுக்கு நேர்ந்த சங்கடம்.. உறுதிப்படுத்திய முன்னாள் வீரர்.. அப்போ ஓய்வுக்கு இதுதான் காரணமா? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
December 21, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
அஸ்வினுக்கு நேர்ந்த சங்கடம்.. உறுதிப்படுத்திய முன்னாள் வீரர்.. அப்போ ஓய்வுக்கு இதுதான் காரணமா? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தாலும், ஓய்வுக்குப் பின்னான சர்ச்சைகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா தொடரின் இடையிலேயே, அஸ்வின் ஓய்வை அறிவித்ததுதான் இப்போது கிரிக்கெட் உலகின் டாக். ஆனால், அப்போது ரோஹித் சர்மா பேசியதற்கும், அஸ்வின் சென்னை திரும்பிய பிறகு ‘நியூஸ்18’க்கு அளித்த பேட்டியும் முரண்படுவதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான அஸ்வினுக்கு 2022க்குப் பிறகு டி20 போட்டியிலும், 2023 உலகக் கோப்பைக்குப் பின்னர் ஒரு நாள் போட்டியிலும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

விளம்பரம்

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அஸ்வின் தொடர்ந்து விளையாடி வந்த நிலையில், சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான உள்ளூர் தொடரை இந்திய அணி முழுமையாக இழந்தது. இதையடுத்து, அஸ்வினுக்கு ஆஸ்திரேலியா செல்வதில் முழு விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது.

அதற்குக் காரணம், ஆஸ்திரேலியா தொடரில் வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, அஸ்வின் ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், கேப்டன் ரோஹித் சர்மா விளையாடாத நிலையில், மூத்த வீரர்கள் அஸ்வின், ஜடேஜாவை ஓரங்கட்டிவிட்டு, வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்தார்.

விளம்பரம்
கனமழையால் தீடீரேன உருவான ‘கடல்’… Tourist ஸ்பாட்டாக மாறிய நாமக்கல் தூசூர் ஏரி.!


கனமழையால் தீடீரேன உருவான ‘கடல்’… Tourist ஸ்பாட்டாக மாறிய நாமக்கல் தூசூர் ஏரி.!

பும்ரா கேப்டனாக இருந்த இப்போட்டியில், அஸ்வின் சேர்க்கப்படாததற்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் காரணம் என கூறப்படுகிறது. அதாவது, அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் பொருட்டு, வாஷிங்டன் சுந்தருக்கு கம்பீர் வாய்ப்பு அளித்ததாகத் தெரிகிறது.

தாம் ஓரங்கட்டப்படுவதை உணர்ந்த அஸ்வின், திடீரென ஆஸ்திரேலிய தொடரின் இடையிலேயே ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். இதைத்தான், தமிழ்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்தும் உறுதிப்படுத்தியுள்ளார். உரிய மரியாதையுடன் அஸ்வின் நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read | ஆஸி., அணியில் முக்கிய மாற்றங்கள்: ஜெய்ஸ்வால்க்கு போட்டியாக இளம் ஓபனர்.. யார் இந்த சாம் கான்ஸ்டாஸ்?

விளம்பரம்

இதனிடையே, 500 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்திய அஸ்வினுக்கு ‘Farewell Test’ போட்டியில் விளையாடுவதற்காக பிசிசிஐ அனுமதித்திருக்க வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்கத் தவறவில்லை. தான் கேப்டனாக இருந்திருந்தால் அவரை இப்படி ஓய்வு பெற்றிருக்க அனுமதித்து இருக்கமாட்டேன் என இந்தியாவுக்கு முதலாவது உலகக் கோப்பை வென்று தந்த கபில்தேவ் கூறியுள்ளார். இதேபோல, கோலி கேப்டனாக இருந்திருந்தால், அஸ்வினை ஓய்வுபெற அனுமதித்து இருக்க மாட்டார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலியும் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இப்படியாக மழை விட்டும் தூவானம் விடாத கதையாக, அஸ்வின் ஓய்வு பெற்றப் பிறகும், அதற்குப் பின்னால் உள்ள சர்ச்சைகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

.

Read More

Previous Post

’செந்தில் பாலாஜியால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?’ லிஸ்டு கேட்ட உச்சநீதிமன்றம்! அரசுக்கு அதிரடி நோட்டீஸ்!

Next Post

Amaran ribut petir, hujan lebat di 3 negeri | Makkal Osai

Next Post
Amaran ribut petir, hujan lebat di 3 negeri | Makkal Osai

Amaran ribut petir, hujan lebat di 3 negeri | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin