ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாள் பிரச்சினை தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (30) பிற்பகல் நடைபெற்றது.
இதன்போது 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகளை இரு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு, உரிய அதிகாரிகளை ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் 3 கேள்விகள் அன்றி, 8 கேள்விகள் பரீட்சைக்கு முன்பாகவே வௌியாகி இருந்ததெனவும், அந்தப் பரீட்சையை மீண்டும் நடத்துமாறும் பெற்றோர்கள், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
|
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

