இதையடுத்து பேரணியின்போது பாஜக எம்.பி.க்கள் தள்ளியதால் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகார் கடிதம் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி மீது பாஜக எம்.பி.க்கள் 3 பேர் தாக்குதல் நடத்தியதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
‘நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது எங்களை பாஜகவினர் தடுத்துநிறுத்தினர். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தினர். ராகுல் காந்தி மீதான அப்பட்டமான தாக்குதல், அவரது கண்ணியத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் ஜனநாயக உணர்வின் மீதான தாக்குதல். இதற்கு மக்களவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

