• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல் – தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
December 18, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஒரே நாடு ஒரே தேர்தல் – தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பா.ஜ.க.வின் முக்கியத் திட்டங்களில் ஒன்று ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம். கடந்த ஆண்டுகளில் இது குறித்து பரவலான பேச்சும் விமர்சனமும் இருந்துவந்த நிலையில், இது குறித்து ஆராய்வதற்காக 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இதற்கான கருத்துக்கேட்பின்போது, திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட 15 கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும் அதிமுக உள்ளிட்ட 32 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

விளம்பரம்

இந்தக் குழு தனது ஆய்வை முடித்து 2024 மார்ச் 14-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தனது 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வழங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த செப். 18-ம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த பரிந்துரைகளை மத்திய அமைச்சரவைக் குழு ஏற்றுக்கொண்டு அதற்கு ஒப்புதல் வழங்கியது.

அதன் அடிப்படையில் இன்று நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான் வாக்கெடுப்பில், 369 எம்பிக்கள் பங்கேற்ற நிலையில் கூட்டுக்குழுவுக்கு மசோதாவை அனுப்ப 220 எம்பிக்கள் ஆதரவும், 149 எம்பிக்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனையடுத்து மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

விளம்பரம்
ஓய்ந்தது மழை… வழக்கம்போல் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.!


ஓய்ந்தது மழை… வழக்கம்போல் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை இனி நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு உட்படுத்தும். கூட்டுக்குழு ஆய்வுக்குப் பிறகு மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும். இந்நிலையில், இந்த மசோதா குறித்து பார்க்கலாம்.

  • முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கொடுத்த அறிக்கையில், அடிக்கடி தேர்தல் நடப்பதால், பொருளாதாரம், சமூகம், அரசியல் ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கம் ஏற்படுகிறது. இதைச் சமாளிக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை நடைமுறைப்படுத்த தெரிவித்தது.

  • முதலில் நாடாளுமன்ற மக்களவைக்கும் சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறும். அது முடிந்த 100 நாளில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்த வேண்டும்.

  • புதிதாக அமைக்கப்படும் மாநில சட்டசபைகளின் கால அவகாசம், அடுத்த பொதுத் தேர்தலுடன் இணைந்ததாக இருக்கும்.

  • முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிக்கையில், இந்தச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதை மேற்பார்வையிடவும் உறுதிப்படுத்தவும் ஒரு அமலாக்கக் குழுவை நிறுவுவதும் பரிந்துரைக்கப்பட்டது.

  • பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு வசதியாக அரசியலமைப்புச் சட்டத்தில் 324A சட்டப்பிரிவு சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளது. அனைத்துத் தேர்தல்களுக்கும் ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் மற்றும் புகைப்பட அடையாள அட்டையை உருவாக்குவதற்கான சட்டப்பிரிவு 325 இல் திருத்தம் ஒன்றையும் குழு முன்மொழிந்தது. ஆனால், இந்தத் திருத்தத்திற்கு மாநிலங்களின் ஒப்புதல் தேவைப்படும்.

  • தொங்கு சட்டமன்றம் அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பட்டால், புதிய தேர்தல்கள் நடத்தப்படும். ஆனால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சபையின் பதவிக்காலம் அடுத்த பொதுத் தேர்தல் வரை மட்டுமே நீடிக்கும்.

  • திறமையான தேர்தல் நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக EVM மற்றும் VVPAT போன்ற அத்தியாவசிய உபகரணங்களை வாங்குவதற்கு முன்கூட்டியே திட்டமிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

.

Read More

Previous Post

Tamilmirror Online || நான் விசேட வைத்திய நிபுணரல்ல;பிரதி சபாநாயகர்

Next Post

காதலியுடன் சேர்ந்து தந்தையை உயிருடன் எரித்த மகன்.. | Makkal Osai

Next Post
காதலியுடன் சேர்ந்து தந்தையை உயிருடன் எரித்த மகன்.. | Makkal Osai

காதலியுடன் சேர்ந்து தந்தையை உயிருடன் எரித்த மகன்.. | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin