• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் நடந்தது என்ன? | Kallakurichi hooch tragedy: Supreme Court clears decks for CBI probe

GenevaTimes by GenevaTimes
December 17, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் நடந்தது என்ன? | Kallakurichi hooch tragedy: Supreme Court clears decks for CBI probe
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 68 பேர் பலியான வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச் சாராயம் குடித்து 68 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளரான ஐ.எஸ்.இன்பதுரை, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவரும், பாமக செய்தி தொடர்பாளருமான வழக்கறிஞர் கே.பாலு, பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ், தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ வால்பாறை டாக்டர் தரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது

.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது கேவியட் மனு தாக்கல் செய்திருந்த இன்பதுரை தரப்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், பாலு தரப்பில் வழக்கறிஞர் தனஞ்செயன், மோகன்தாஸ் தரப்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆகியோர் ஆஜராகி, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தனர். தமிழக அரசின் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இந்த வழக்கில் விசாரணை ஏற்கெனவே முடிந்து விட்டது. எனவே சிபிஐக்கு மாற்றத் தேவையில்லை என்றார்.

அதற்கு நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரிப்பதால் தமிழக அரசுக்கு என்ன ஆட்சேபம் இருக்கிறது? உங்களது விசாரணையில் திருப்தி இல்லை என்பதால்தான் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றியுள்ளது. எனவே, இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



Read More

Previous Post

வைத்தியர் அருச்சுனா மற்றும் சட்டத்தரணிக்கு பிணை

Next Post

சிரியாவிலிருந்து ரஷ்யா தப்பிச் சென்ற ஆசாத் ரூ.2 ஆயிரம் கோடியை எடுத்து சென்றார் | Syrian President Bashar Al Assad flew 250 million in cash to Moscow

Next Post
சிரியாவிலிருந்து ரஷ்யா தப்பிச் சென்ற ஆசாத் ரூ.2 ஆயிரம் கோடியை எடுத்து சென்றார் | Syrian President Bashar Al Assad flew 250 million in cash to Moscow

சிரியாவிலிருந்து ரஷ்யா தப்பிச் சென்ற ஆசாத் ரூ.2 ஆயிரம் கோடியை எடுத்து சென்றார் | Syrian President Bashar Al Assad flew 250 million in cash to Moscow

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin