• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு சிக்கல்! மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

GenevaTimes by GenevaTimes
December 17, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு சிக்கல்! மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.



இந்த மனு நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டுக் குழு முன்னிலையில் இன்று (17) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

 நீதியரசர்களின் உத்தரவு



இந்த மனுவை ஜனவரி 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உண்மைகளை உறுதிப்படுத்த நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.



நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த பொதுத் தேர்தலின் போது அரச வைத்தியராகக் கடமையாற்றிய நிலையில், வேட்பு மனுவை சமர்ப்பித்ததாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு சிக்கல்! மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Supreme Court Order To Ramanathan Archchuna Mp


அரச சேவையிலிருந்து விலகாமல் இவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்வது சட்டவிரோதமானது என சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், அது தேர்தல்கள் சட்ட விதிகளுக்கு முரணானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.



இதன்படி, அரசியல் சாசனத்தின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனப் பிரகடனப்படுத்தி, அந்த ஆசனத்தை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி மனுதாரர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

பள்ளி விடுமுறை நாட்களில் இலவச கொம்தார்-பினாங்கு ஹில் ஷட்டில் சேவை | Makkal Osai

Next Post

மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்கள் வாக்களிப்பு | One nation, one election bills introduced in Lok Sabha, 269 MPs vote in favour

Next Post
மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்கள் வாக்களிப்பு | One nation, one election bills introduced in Lok Sabha, 269 MPs vote in favour

மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்கள் வாக்களிப்பு | One nation, one election bills introduced in Lok Sabha, 269 MPs vote in favour

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin