மகாராஷ்டிரா: அமைச்சரவையில் இடம்பெறாததினால் சிவசேனை எம்.எல்.ஏ நரேந்திர போண்டேகர் அக்கட்சி பதவிகள் அனைத்தையும் ராஜிநாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சியமைத்தது. அவரது அமைச்சரவையில் பிரதான கூட்டணிக் கட்சியான சிவசேனைக்கும் பங்களிக்கப்பட்டு ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சரானார். அவருடன் 11 சிவசேனை எம்.எல்.ஏ.க்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், அம்மாநில பந்தாரா தொகுதியில் 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிவசேனை எம்.எல்.ஏ நரேந்திர போண்டேகருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாததினால் அவர் சிவசேனையின் அனைத்து கட்சிப் பதவிகளிலிருந்தும் ராஜிநாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதற்கு முந்தைய தேர்தலில் வெற்றிப் பெற்று சுயட்சை எம்.எல்.ஏவாக அவர் பதவி வகித்தபோது ஷிண்டே தலைமையிலான சிவசேனையிற்கு அவர் ஆதரவளித்ததாகவும், அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று ஷிண்டே கொடுத்த வாக்கினை நம்பி இம்முறை அவர் சிவசேனையில் இணைந்ததாகவும் அவர் கூறினார்.

&w=1200&resize=1200,675&ssl=1)