• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ”எதிர்காலத்தில் மைத்திரி உரிமை கோர மாட்டார்”

GenevaTimes by GenevaTimes
December 16, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ”எதிர்காலத்தில் மைத்திரி உரிமை கோர மாட்டார்”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவிக்கு எதிர்காலத்தில் எந்த உரிமையும் கோரப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணி ஊடாக இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அவமதித்ததாகக் கூறி தனது கட்சிக்காரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு மனுவுக்கு தீர்வு காணக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.


எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவிக்கு தனது கட்சிக்காரர் உரிமை கோர மாட்டார் என அவர் நீதிமன்றத்திற்கு உறுதியளித்தார்.


2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை மீறியதாகக் கூறி, நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக மைத்திரிபால சிறிசேனவை தண்டிக்க உத்தரவிடுமாறு கோரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர் மொன்டேக் சரத்சந்திர இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.


நீதிமன்ற அவமதிப்பு மனு நீதியரசர் (ஜனாதிபதி) நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன இந்த விடயத்தை தீர்க்க முடியும் என மீண்டும் வலியுறுத்தினார்.


எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவிக்கான கோரிக்கையை மைத்திரிபால தொடரமாட்டார் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


மனுதாரர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சாந்த ஜயவர்தன, இந்த தீர்வை அங்கீகரித்ததுடன், நீதிமன்ற அவமதிப்பு மனுவை வாபஸ் பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுத்து 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.


கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவு இருந்தபோதிலும், பிரதிவாதி சிறிசேன 2024 மே 12 ஆம் திகதி வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகச் செயற்படுவதாகக் கூறிக்கொண்டதாக மனுதாரர் குற்றஞ்சாட்டினார்.


2024 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டு கட்சியின் பிரதிச் செயலாளர் சரத் ஏக்கநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தக் கடிதத்தின்படி 2024 மே 12ஆம் திகதி பதவி விலகும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை தாம் நிறைவேற்றியதாக சிறிசேன கூறியதாக மனுதாரர் மேலும் குறிப்பிட்டார். பிரதிவாதியான சிறிசேன இதனால் நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் நிர்வாகத்தை அவமதித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.



Read More

Previous Post

ஊழியர்களுக்கு சொக்சோ பங்களிப்புகளைத் தவிர்க்கும் விமான நிறுவனங்களுக்கான விரைவான ஆய்வு மேற்கொள்ளப்படும் | Makkal Osai

Next Post

ஜாபர் சாதிக் குற்றத்திற்கு பாடநூல் கழகம் உடந்தையா? புயலை கிளப்பும் அண்ணாமலை! பதில் சொல்வாரா அன்பில்!

Next Post
ஜாபர் சாதிக் குற்றத்திற்கு பாடநூல் கழகம் உடந்தையா? புயலை கிளப்பும் அண்ணாமலை! பதில் சொல்வாரா அன்பில்!

ஜாபர் சாதிக் குற்றத்திற்கு பாடநூல் கழகம் உடந்தையா? புயலை கிளப்பும் அண்ணாமலை! பதில் சொல்வாரா அன்பில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin