• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் ஸ்மித், ஹெட் சதம்: ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் குவிப்பு | India vs Australia Highlights, 3rd Test Day 2

GenevaTimes by GenevaTimes
December 15, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் ஸ்மித், ஹெட் சதம்: ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் குவிப்பு | India vs Australia Highlights, 3rd Test Day 2
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரிஸ்பன்: இந்தியாவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் விளாசினர். இந்திய அணியின் சார்பில் பும்ரா 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதையடுத்து தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பனிலுள்ள காபா மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டது. முதல் நாளில் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து எஞ்சியுள்ள 4 நாட்களிலும் கூடுதலாக அரை மணி நேரம் ஆட்டம் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று மழை பெய்யாத நிலையில் 2-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. உஸ்மான் கவாஜா 19 ரன்களுடனும், நேதன் மெக்ஸ்வீனி 4 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடங்கினர்.

ஆனால் இவர்கள் இருவரையும் தனது அபாரமான பந்துவீச்சால் வீழ்த்தினார் பும்ரா. கவாஜா 21 ரன்களும், மெக்ஸ்வீனி 9 ரன்களும் எடுத்து வீழ்ந்தனர். மார்னஸ் லபுஷேன் 55 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் நித்திஷ் ரெட்டி பந்துவீச்சில் கோலியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித்தும், டிராவிஸ் ஹெட்டும் அபாரமாக விளையாடி இன்னிங்ஸை கட்டமைத்தனர். பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப், நித்திஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பந்துகளை இந்தக் கூட்டணி சிதறடித்தது. ஸ்மித் நிதானமாக விளையாட, மற்றொரு முனையில் டிராவிஸ் ஹெட் அதிரடி காட்டினார்.

அடிலெய்டு போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் ஹெட், அபாரமாக விளையாடி சதமடித்தார். ஹெட் 160 பந்துகளில் 152 ரன்கள் (18 பவுண்டரிகள்) எடுத்தும், ஸ்மித் 190 பந்துகளில் 101 ரன்கள் (12 பவுண்டரிகள்) எடுத்தும் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தனர். 4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 241 ரன்கள் குவித்தது. பின்னர் வந்த மிட்செல் மார்ஷ் 5, பாட் கம்மின்ஸ் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் அலெக்ஸ் கேரி 45, மிட்செல் ஸ்டார்க் 7 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். ஜஸ்பிரீத் பும்ரா 5, முகமது சிராஜ், நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தலைவலியான ஹெட்: இந்தப் போட்டியில் 152 ரன்களைக் குவித்த டிராவிஸ் ஹெட்டுக்கு, டெஸ்ட் போட்டிகளில் 9-வது சதமாக இது அமைந்தது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் எடுத்து இந்திய அணி வீரர்களை சோதனைக்குள்ளாக்கியுள்ளார் ஹெட். அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியிலும் ஹெட் சதம் விளாசியிருந்தார்.மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இந்திய அணிக்கெதிராக சதங்களை விளாசி இந்திய அணிக்கு தலைவலியான வீரராகவும் மாறி வருகிறார் ஹெட். இதுகுறித்து ஹெட் கூறும்போது, “நாங்கள் இந்தியாவுக்கு எதிராக அதிக முறை விளையாடுகிறோம். அவர்களுடைய பந்துவீச்சை நான் அடிக்கடி பார்த்து வருகிறேன். அவர்களது பந்துவீச்சை கூர்மையாக கவனிக்கிறேன். இந்திய அணியினர் எப்போதும் கடும் சவால்களை அளிக்கும் அணியாக இருக்கின்றனர். அடிலெய்டு மற்றும் பெர்த்தில் நான் நன்றாகத்தான் விளையாடினேன் என நினைக்கிறேன். நான் எப்போதுமே, என்னுடைய அணியின் வெற்றிக்காகத்தான் விளையாடுவேன். அணிக்கு என்ன தேவையோ அதைத்தான் நான் செய்கிறேன்” என்றார்.

கபில்தேவின் சாதனையை முறியடித்த பும்ரா: பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் முன்னாள் கேப்டன் கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கபில்தேவ் 9 முறை 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். தற்போது பும்ரா, 10 முறை 5 விக்கெட்களை வீழ்த்தி கபிலின் சாதனையை முறியடித்துள்ளார். டிராவிஸ் ஹெட், ஸ்மித், உஸ்மான் கவாஜா, நேதன் மெக்ஸ்வீனி, மிட்செல் மார்ஷ் ஆகியோரின் விக்கெட்களை பும்ரா கைப்பற்றினார். அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டில்சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்களைச் சாய்த்தவர்கள் வரிசையில் பும்ரா முதலிடத்தில் உள்ளார். அவர் 20 போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்களைச் சாய்த்துள்ளார்.

ஸ்மித் 33-வது சதம்: இந்தப் போட்டியில் ஸ்மித் 101 ரன்கள் விளாசினார். இது டெஸ்ட் போட்டிகளில் இவரது 33-வது சதமாக அமைந்தது. மேலும் 25 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அவர் சதத்தை விளாசியுள்ளார். அதேபோல் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் ஸ்மித் 9 சதங்களை விளாசி சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது வரிசையில் இணைந்துள்ளார். சச்சின், விராட் கோலி ஆகியோரும் பார்டர்-கவாஸ்கர் தொடரில் 9 சதங்களை விளாசியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த பார்டர்-கவாஸ்கர் தொடரில் 2 ஆயிரம் ரன்கள்குவித்த 8-வது வீரர் என்ற பெருமையையும் ஸ்மித் பெற்றுள்ளார். அவர் 21 போட்டிகளில் விளையாடி 2,007 ரன்களை எடுத்துள்ளார்.



Read More

Previous Post

சபரிமலையில் 29 நாள்களில் 22.67 லட்சம் பக்தா்கள் வழிபாடு

Next Post

வேகமெடுக்கும் மின் இணைப்பு துண்டிப்பு : மின் பாவனையாளர்கள் பரிதவிப்பு

Next Post
வேகமெடுக்கும் மின் இணைப்பு துண்டிப்பு : மின் பாவனையாளர்கள் பரிதவிப்பு

வேகமெடுக்கும் மின் இணைப்பு துண்டிப்பு : மின் பாவனையாளர்கள் பரிதவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin