• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

444 நாட்கள் முதலீடு தான்..! அசத்தில் வட்டி வழங்கும் SBI அம்ரித் விருஷ்டி திட்டம்.. சிறப்புகள் என்ன?

GenevaTimes by GenevaTimes
December 14, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
444 நாட்கள் முதலீடு தான்..! அசத்தில் வட்டி வழங்கும் SBI அம்ரித் விருஷ்டி திட்டம்.. சிறப்புகள் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கஸ்டமர்களுக்கு அட்டகாசமான சேமிப்பு வாய்ப்புகளை அளிப்பதற்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அம்ரித் விருஷ்டி என்ற ஒரு குறுகிய கால நிலையான டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 16ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட இந்த தனித்துவமான திட்டம் சிறந்த வட்டி விகிதம் மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு பிரத்தியேகமான பலன்களை அளிக்கிறது. இது இந்தியாவில் வசிக்கும் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆகிய இருவருக்கும் நன்மைகளை அளிக்கிறது.

SBI அம்ரித் விருஷ்டி திட்டம் என்பது என்ன?

விளம்பரம்

அம்ரி விருஷ்டி திட்டம் என்பது 444 நாட்கள் கால அளவு கொண்ட ஒரு டேர்ம் டெபாசிட் திட்டம். இது ஒரு ஆண்டுக்கு 7.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும் சீனியர் சிட்டிசன்களுக்கு இத்திட்டத்தில் 7.75 சதவீத அதிக வட்டி கிடைக்கிறது.

தகுதி வரம்பு:

  • 3 கோடி ரூபாய்க்கும் குறைவான உள்நாட்டு ரீடெயில் டேர்ம் டெபாசிட்

  • புதிய டெபாசிட் மற்றும் ஏற்கனவே இருக்கும் டெபாசிட்டுகளை புதுப்பித்தல்

  • டேர்ம் டெபாசிட் மற்றும் ஸ்பெஷல் டேர்ம் டெபாசிட்டுகள்

இதையும் படிக்க:
வட்டியில்லா கடன்கள் பெற இத்தனை வழிகள் இருக்கிறதா? எவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..

விதிவிலக்குகள்:

இந்த திட்டத்தில் SBI ஊழியர்கள் மற்றும் சீனியர் சிட்டிசன்களின் ரெக்கரிங் டெபாசிட்டுகள், வரி சேமிப்பு டெபாசிட்டுகள், ஆண்டுவாரியான டெபாசிட், மல்டி ஆப்ஷன் டெபாசிட்டுகள், NRI டெபாசிட்டுகள் போன்றவை பொருந்தாது.

முக்கிய அம்சங்கள்:

விளம்பரம்
  1. குறைந்தபட்ச டெபாசிட் 1000 ரூபாய்.

  2. அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது.

  3. பொதுவான கஸ்டமர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 7.25%

  4. சீனியர் சிட்டிசன்களுக்கு ஒரு ஆண்டுக்கு 7.75% வட்டி வழங்கப்படும்.

வட்டி வழங்கப்படும் ஆப்ஷன்கள்:

  • டேர்ம் டெபாசிட்கள்: ஒவ்வொரு மாதம், 3 மாதங்களுக்கு ஒரு முறை, அல்லது வருடத்திற்கு இரண்டு முறை

  • ஸ்பெஷல் டேர்ம் டெபாசிட்டுகளுக்கு மெச்சூரிட்டியின் பொழுது வழங்கப்படும்.

ப்ரீ மெச்சூர் வித்டிராயல் செய்வதற்கான விதிகள்:

  1. 5 லட்ச ரூபாய் வரையிலான டெபாசிட்களுக்கு 0.50 சதவீத அபராதம்.

  2. 5 லட்சம் ரூபாய்க்கு மேல் 3 கோடி ரூபாய்குள்ளாக இருக்கும் டெபாசிட்களுக்கு 1% அபராதம்

  3. 7 நாட்களுக்கு முன்பு வித்டிரா செய்யப்படும் டெபாசிட்களுக்கு வட்டி வழங்கப்படாது.

  4. எனினும் SBI ஊழியர்கள் மற்றும் பென்ஷனர்களுக்கு அபராதங்கள் எதுவும் விதிக்கப்படாது. மேலும் அவர்களுக்கு டெபாசிட் உண்மையான கால அளவுக்கு பொருந்தும் வட்டி விகிதம் வழங்கப்படும்.

சைவ உணவு உண்பவர்களுக்கு தாவர அடிப்படையிலான 8 உயர் புரத உணவுகள்.!


சைவ உணவு உண்பவர்களுக்கு தாவர அடிப்படையிலான 8 உயர் புரத உணவுகள்.!

SBI அம்ரித் விருஷ்டி திட்டத்திற்கான வரி பலன்கள்:

இந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் வட்டி பணத்திற்கு வரி செலுத்த வேண்டும்.

லோன் வசதி:

இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள டெபாசிட்களை அடைமானமாக வைத்து கஸ்டமர்கள் கடன் வாங்கலாம்.

SBI அம்ருத் விருஷ்டி திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி?

பின்வரும் சேனல்கள் மூலமாக முதலீடுகளை செய்யலாம்.

  • SBI கிளைகள்

  • YONO SBI மற்றும் YONO Lite போன்ற மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்கள்

  • SBI இன்டர்நெட் பேங்கிங்

SBI அம்ரித் விருஷ்டி திட்டம் கணக்கீடு

முதலீட்டு தொகை: 1,00,000 ரூபாய்

சீனியர் சிட்டிசன்களுக்கு வட்டி: 9787.04

மெச்சூரிட்டி தொகை: 1,09,787.04

பொதுவான சிட்டிசன்களுக்கு வட்டி: 9133.54

மெச்சூரிட்டி தொகை: 1,09,133.54

SBI அம்ரித் விருஷ்டி திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 31, 2025. மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகில் உள்ள SBI கிளை அல்லது SBI பிளாட்ஃபார்ம்கள் மூலமாக டிஜிட்டல் பேங்கிங் ஆப்ஷன்களை பயன்படுத்தவும்.

விளம்பரம்

.

Read More

Previous Post

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு 720 ரூபாய் குறைந்தது.. இதோ இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!

Next Post

KL – இல் மனித கடத்தல் கும்பல் கைது, 11 பேர் மீட்பு – Malaysiakini

Next Post
KL – இல் மனித கடத்தல் கும்பல் கைது, 11 பேர் மீட்பு – Malaysiakini

KL – இல் மனித கடத்தல் கும்பல் கைது, 11 பேர் மீட்பு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin