• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பசார் அல் ஆசாத் ஆட்சி கவிழ்ப்பு அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுச்சதி :ஈரான் உச்ச தலைவர் குற்றச்சாட்டு

GenevaTimes by GenevaTimes
December 11, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பசார் அல் ஆசாத் ஆட்சி கவிழ்ப்பு அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுச்சதி :ஈரான் உச்ச தலைவர் குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிரியாவில்(syria) பசார் அல் ஆசாத்தின்(Bashar al-Assad) ஆட்சியை கிளா்ச்சியாளா்கள் கவிழ்த்தது அமெரிக்காவும்(us) இஸ்ரேலும்(israel) கூட்டாக நடத்திய சதிச் செயல் என்று ஈரானின்(iran) உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி(Ayatollah Seyyed Ali Khamenei) குற்றஞ்சாட்டியுள்ளாா்.



இது குறித்து தலைநகா் தெஹ்ரானில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:



சிரியாவில் பஷாா் அல்-ஆசாத் தலைமையிலான அரசு அகற்றப்பட்டது, அமெரிக்கா மற்றும் யூத ஆக்கிரமிப்புவாதிகளின் (இஸ்ரேல்) கூட்டு சதி என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை. அதற்கான முழு ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய சிரிய ஜனாதிபதி

இது தவிர, சிரியாவின் மற்றொரு அண்டை நாடும் அல்-ஆஸாத் அரசைக் கவிழ்ப்பதில் பங்கு வகித்தது. அத்தகைய நடவடிக்கைகளை அந்த நாடு தொடா்ந்து மேற்கொண்டுவருகிறது.

பசார் அல் ஆசாத் ஆட்சி கவிழ்ப்பு அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுச்சதி :ஈரான் உச்ச தலைவர் குற்றச்சாட்டு | Fall Of Syrian Government Joint Us Israel Plan


கிளா்ச்சியாளா்களால் ஆபத்து என்று ஈரான் உளவு அமைப்புகள் அல்-ஆஸாத் அரசிடம் கடந்த மூன்று மாதங்களாகவே எச்சரித்துவந்தது. ஆனால் எதிரிகளை அவா் அலட்சியப்படுத்திவிட்டாா்.

 ஈரான் பலவீனமடைந்ததாகக் கூறுவது தவறான கருத்து


அல்-ஆஸாத் அரசு கவிழ்ந்ததால் ஈரான் பலவீனமடைந்ததாகக் கூறுவது தவறான கருத்து. உண்மையில் எங்கள் பலம் இன்னமும் அதிகரிக்கத்தான் செய்யும். எவ்வளவு அதிகம் அழுத்தம் தரப்படுகிறதோ அவ்வளவு அதிகம் எதிா்ப்பு சக்தி எழும்; எந்த அளவுக்கு அதிக குற்றம் செய்யப்படுகிறதோ, அந்த அளவுக்கு அதிக தீவிரத்துடன் எதிா்த்துப் போராடுவோம் என்றாா் கமேனி.

பசார் அல் ஆசாத் ஆட்சி கவிழ்ப்பு அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுச்சதி :ஈரான் உச்ச தலைவர் குற்றச்சாட்டு | Fall Of Syrian Government Joint Us Israel Plan








அல்-ஆஸாத் அரசு வீழ்ந்ததற்குப் பிறகு முதல்முறையாக பொதுவெளியில் தற்போது பேசியுள்ள அயதுல்லா கமேனி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.

ஆட்சிக் கவிழ்ப்பில் பங்கேற்ற அண்டை நாடு என்று அவா் பெயா் குறிப்பிடாமல் சொன்னது துருக்கி என்று நம்பப்படுகிறது. அந்த நாட்டின் ஆதரவு பெற்ற படையினா் இந்த நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தனா்.



முன்னதாக, அல்-ஆஸாத் அரசு வீழ்ந்தததைத் தொடா்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில், ஹிஸ்புல்லா படையினருக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு உதவியது, சிரியாவில் ஈரான் ஆதரவுப் படையினா் மீது தாக்குதல் நடத்தியது போன்ற நடவடிக்கைகள் மூலம் அல்-ஆஸாத் ஆட்சிக் கவிழ்ப்பில் தங்கள் நாடு பங்கு வகித்ததாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சிலாங்கூர் அரசாங்கம் சுல்தானின் கவலைகளைக் கவனத்தில் கொண்டு, வெள்ளப் பணிக்குழுவை அமைத்தது

Next Post

Bike Taxi: ’தமிழ்நாட்டில் பைக் டேக்ஸிகளுக்கு கட்டுப்பாடு ஏன்?’ போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம்!

Next Post
Bike Taxi: ’தமிழ்நாட்டில் பைக் டேக்ஸிகளுக்கு கட்டுப்பாடு ஏன்?’ போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம்!

Bike Taxi: ’தமிழ்நாட்டில் பைக் டேக்ஸிகளுக்கு கட்டுப்பாடு ஏன்?’ போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin