• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரபல நடிகரை கடத்தி 12 மணி நேரம் துன்புறுத்திய கும்பல்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

GenevaTimes by GenevaTimes
December 11, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிரபல நடிகரை கடத்தி 12 மணி நேரம் துன்புறுத்திய கும்பல்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெல்லியில் ஒரு கோடி ரூபாய் கேட்டு பாலிவுட் நடிகர் கடத்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னணி பாலிவுட் நடிகர் அக்சய் குமாரியின் வெல்கம் மற்றும் ஸ்ட்ரீ-2 படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் முஷ்டாக் கான். இவர் பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தனது பிஸி செடூலிலும் விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ஆஃபர் வந்துள்ளது. மீரட்டில் நடைபெறும் அந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் முஷ்டாக் கான் பங்கேற்க வேண்டும் என்று அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த பயணத்திற்கான விமான டிக்கெட் உடன் முன் பணமும் அவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதையடுத்து, கடந்த நவம்பர் 20 ஆம் தேதி மும்பையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் பறந்து சென்றுள்ளார். பின்னர், அங்கு காத்திருந்தவர்களுடன் நடிகர் முஷ்டாக் கான் காரில் சென்றுள்ளார். அந்த கார் மீரட்டிற்கு செல்வதற்குப் பதில், பிஜ்னோர் நோக்கி சென்றுள்ளது. அப்போது தான், தான் திட்டமிட்டு கடத்தப்பட்டதை முஷ்டாக் உணர்ந்துள்ளார். இருந்தபோதும் பதற்றமடையாத அவர், உங்களுக்கு என்ன வேண்டும், எதற்காக தன்னை கடத்தினீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு, கடத்தல் கும்பல் ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் உயிருடன் விட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க : திருவண்ணாமலை தீபத்தன்று பக்தர்கள் மலை ஏற தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இதனைத்தொடர்ந்து, பிஜ்னோர் பகுதிக்கு அழைத்துச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். அங்கு 12 மணி நேரம் முஷ்டாக் கானை, கட்டி வைத்து அடித்து, துன்புறுத்தியுள்ளனர். டார்ச்சர் தாங்க முடியாததால் தனது மகன் மற்றும் தனது வங்கி கணக்கில் இருந்த 2 லட்சம் ரூபாயை மட்டும் கடத்தல் கும்பலுக்கு கொடுத்துள்ளார். பின்னர், சாமர்த்தியமாக செயல்பட்ட நடிகர் முஷ்டாக் கான், கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பித்து அருகில் உள்ள மசூதியில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து கடத்தல் குறித்து பிஜ்னோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விளம்பரம்
குளிர்காலத்தில் உடல் எடையை குறைப்பதற்கான 7 எளிய வழிகள்.!


குளிர்காலத்தில் உடல் எடையை குறைப்பதற்கான 7 எளிய வழிகள்.!

புகாரின்பேரில், விமான டிக்கெட் மற்றும் வங்கி கணக்கை ஆய்வு செய்து, கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். தான் கடத்தப்பட்டதை நடிகர் முஷ்டாக் கான் வெளியே கூறாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், காமெடி நடிகர் சுனில் பால் என்பவரை, டப்பிக் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்துச் செல்வதாக கூறி, அவரை ஒரு கும்பல் கடத்தியுள்ளது. இதேபோல், நடிகர் முஷ்டாக் கானையும் விருது வழங்கும் நிகழ்சியில் பங்கேற்க அழைத்து, ஒரு கும்பல் கடத்தியதாக அவரின் நண்பர் தற்போது தெரிவித்துள்ளார். போலியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுத்து அடுத்தடுத்து நடிகர்கள் கடத்தப்பட்ட சம்பவம், பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

Tamilmirror Online || முன்னாள் அமைச்சர் தற்கொலைக்கு முயற்சி

Next Post

ரூ.13,000 கோடி மோசடி செய்த தொழிலதிபர் மெகுல் சோக்சியின் ரூ.2,500 கோடி சொத்து ஏலம் | Businessman Mehul Choksi property auctioned

Next Post
ரூ.13,000 கோடி மோசடி செய்த தொழிலதிபர் மெகுல் சோக்சியின் ரூ.2,500 கோடி சொத்து ஏலம் | Businessman Mehul Choksi property auctioned

ரூ.13,000 கோடி மோசடி செய்த தொழிலதிபர் மெகுல் சோக்சியின் ரூ.2,500 கோடி சொத்து ஏலம் | Businessman Mehul Choksi property auctioned

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin