• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வங்கதேச சிறுபான்மையினரை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மம்தா பானர்ஜி | Centre must act, protect minorities in Bangladesh: Mamata

GenevaTimes by GenevaTimes
December 11, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
வங்கதேச சிறுபான்மையினரை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மம்தா பானர்ஜி | Centre must act, protect minorities in Bangladesh: Mamata
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திகா(மேற்கு வங்கம்): வங்கதேச சிறுபான்மையினரை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

ஜெகநாதர் கோயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இரண்டு நாள் பயணமாக திகாவுக்குச் சென்றுள்ள மம்தா பானர்ஜி அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வேண்டும். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவுக்குத் திரும்ப விரும்புபவர்கள் அழைத்து வரப்பட வேண்டும்” என்று கூறினார்.

இந்துக்கள் தாக்கப்படும் வீடியோக்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மம்தா பானர்ஜி, “இது தொடர்பாக நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் கூறியுள்ளேன். பல போலி வீடியோக்கள் பரப்பப்பட்டு மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை முஸ்லிம் மதகுருமார்களும் விமர்சித்துள்ளனர். இந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய அரசு வங்கதேசத்துக்கு ஒரு பிரதிநிதியை அனுப்பியுள்ளது, அது அவர்களின் பொறுப்பு. அந்த நாட்டிலிருந்து அதிகமானோர் திரும்பி வருவதற்கு விசா வழங்குவது அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் என்னிடம் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

இந்தியா-வங்கதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த பானர்ஜி, “விமானங்கள் மற்றும் ரயில்கள் இயங்குவதாகவும், விசா மற்றும் பாஸ்போர்ட் உள்ளவர்கள் வந்து கொண்டிருப்பதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்திய-வங்கதேச எல்லைகள் எதுவும் மூடப்படவில்லை” என்று உறுதிபட கூறினார்.

வங்கதேசத்தில் 17 கோடி மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களில் இந்துக்கள் 8% உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 5 அன்று ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததிலிருந்து 50-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்துக்கள் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

Tamilmirror Online || ரயில் பயணச்சீட்டு முன்பதிவிலும் மோசடி

Next Post

அன்று சாதாரண பேராசிரியர்.. இன்று ரூ.23,022 கோடி மதிப்பு சொத்துக்கு அதிபதி… யார் இந்த ஆசாத் மூப்பன்?

Next Post
அன்று சாதாரண பேராசிரியர்.. இன்று ரூ.23,022 கோடி மதிப்பு சொத்துக்கு அதிபதி… யார் இந்த ஆசாத் மூப்பன்?

அன்று சாதாரண பேராசிரியர்.. இன்று ரூ.23,022 கோடி மதிப்பு சொத்துக்கு அதிபதி... யார் இந்த ஆசாத் மூப்பன்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin