• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பிறந்தவுடன் இறந்த குழந்தையை கொடுக்க மறுத்தோமா? – உண்மையில்லை என்கிறது தனியார் மருத்துவமனை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 11, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பிறந்தவுடன் இறந்த குழந்தையை கொடுக்க மறுத்தோமா? – உண்மையில்லை என்கிறது தனியார் மருத்துவமனை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இறந்த குழந்தையின் உடலை தவறாகக் கையாண்டதாகவும், அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை தாமதப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை  ரஃபிக்  மகப்பேறு தனியார் (HBR)  மருத்துவமனை மறுத்துள்ளது. இது தனது முதல் கர்ப்பம் என்று கூறிய தாய்,  பிறப்புக்கு முந்தைய எந்த  சோதனைகளும் இல்லாமல்  பிரசவத்திற்கு வந்ததாக மருத்துவமனை கூறியது.

அவருடன் ஆரம்பத்தில் அவரது கணவர் என்று வர்ணிக்கப்பட்ட ஒரு நபர் இருந்தார். ஆனால் பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெளிவுபடுத்தினார். பின்னர் பிரசவ அறைக்கு  அழைத்து வரப்பட்டவுடன் உடனடியாக குழந்தை பிறந்தது. அவரது குழந்தை சைக்ளோபியா நோய்க்குறியுடன் பிறந்தது. அதாவது ஒரு கண், மூக்கு இல்லாமல் இருந்ததாக அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மருத்துவ சிகிச்சை பெற்ற சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டதாக HBR கூறியது. அடுத்த நாள் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வதற்கான அறிவுறுத்தலுடன் அந்த நபருக்கு அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மறுநாள் இல்லம் திரும்ப  தாய் அனுமதிக்கப்பட்டதாகவும், 2,480 ரிங்கிட் மருத்துவமனை கட்டணத்தை தன்னால் வழங்க முடியவில்லை என்று மருத்துவமனை ஊழியர்களுக்குத் தெரிவித்தார்.

இருப்பினும் HBR, பணம் செலுத்தும் ஏற்பாடுகளைச் செய்யுமாறும் குழந்தையை அடக்கம் செய்ய அனுமதித்ததாகக் கூறியது. நாட்கள் செல்லச் செல்ல, HBR அப்பெண்ணை அழைத்து  குழந்தையின் அடக்கம் குறித்து நினைவூட்டிக் கொண்டே இருந்தது.  ஆனால் அப்பெண் ‘கணவர்’ ஏற்பாடு செய்வதாக சொல்லிக்கொண்டே இருந்தார்.

தாயாருக்கு மருத்துவ ஆலோசனை, இலவச உணவு மற்றும் ஆதரவை வழங்கியதாக மருத்துவமனை மேலும் கூறியது. அவர் தனது விவரங்களை காவல்துறைக்கோ அல்லது உறவினர்களோ வழங்க வேண்டாம் என்று கெஞ்சியதாகவும் கூறப்படுகிறது. HBR அதன் அனைத்து பரிவர்த்தனைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் இணக்கத்திற்கு உறுதியுடன் உள்ளது.

இன்று முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், மருத்துவமனை நிர்வாகத்தை பொறுப்பேற்கவும் சுகாதார அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான அஹ்மத் யூனுஸ் ஹைரி, குடும்பத்தால் உண்மையிலேயே செலவுகளை ஏற்க முடியவில்லை என்றால் மருத்துவமனை நிர்வாகம் சமூக நலத்துறை அல்லது சிலாங்கூர் ஜகாத் வாரியத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.

அடக்கம் செய்யுமாறு குடும்பத்தினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் குழந்தையின் சடலம் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறுதிச் சடங்குகள் செய்வதற்கு முன், 3,600 ரிங்கிட் பில் தொகையை செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.



Read More

Previous Post

சீன அரசையே உலுக்கிய பெண்ணியவாதிகளின் கோபம் – ‘சானிட்டரி பேட்’ சர்ச்சையும் பின்புலமும் | China feminists sanitary pads controversy

Next Post

அமெரிக்கா குடியுரிமை சட்டத்தில் மாற்றம்…! புலம்பெயர் மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

Next Post
அமெரிக்கா குடியுரிமை சட்டத்தில் மாற்றம்…! புலம்பெயர் மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

அமெரிக்கா குடியுரிமை சட்டத்தில் மாற்றம்...! புலம்பெயர் மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin