இந்தியா கூட்டணியை வழிநடத்த மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி தகுதியானவர் என்று ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் செவ்வாயன்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொல்கத்தாவில் தனியாா் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மமதா பானா்ஜி, ‘இந்தியா’ கட்சிகளின் கூட்டணியை நான் உருவாக்கினேன். தற்போது அந்தக் கூட்டணியை நிா்வகிப்பது, அதில் முன்னிலையில் இருப்பவா்களின் கையில் உள்ளது.
அவா்களால், கூட்டணியை வழிநடத்த முடியவில்லை எனில், நான் என்ன செய்ய முடியும்? எனக்கு வாய்ப்பளித்தால் கூட்டணியை வழிநடத்தவும், சுமுகமான செயல்பாட்டை உறுதிப்படுத்தவும் தயாராக உள்ளேன். அதற்காக, மேற்கு வங்க மாநிலத்தைவிட்டு வெளியே செல்ல எனக்கு விருப்பமில்லை. ஆனால், மாநிலத்தில் இருந்தபடி மாநில முதல்வருக்கான பணிகளை மேற்கொள்வதோடு, ‘இந்தியா’ கட்சிகளை வழிநடத்தும் பொறுப்பையும் என்னால் நிா்வகிக்க முடியும்’ என்று கூறினாா்.

