• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மனைவி, மாமியாரை மண்டியிடவைத்து கொள்ளை

GenevaTimes by GenevaTimes
December 8, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மனைவி, மாமியாரை மண்டியிடவைத்து கொள்ளை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



போதைப்பொருள் கடத்தல்காரரைக் கொல்வதற்காக மாறுவேடமிட்டு கடத்தல்காரரின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் அது நிறைவேறாமையால், அவரது மனைவி மற்றும் மனைவியின் தாயாரைக் முழந்தாலிடச் செய்து, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.


அவ்வாறு பொருட்களை கொள்ளையடித்த, ஏ.எஸ்.பி. புனைப்பெயரால் அழைக்கப்படும் குற்றவாளி உட்பட நால்வர் சில மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சந்தேகநபர்களுடன் திருடப்பட்ட தங்க நகைகள், கைத்தொலைபேசிகள், கொள்ளைக்கு பயன்படுத்திய கூரிய ஆயுதங்கள், இரும்பு கம்பி, பாதுகாப்பு தலைக்கவசங்கள், மாறுவேடத்தில் பயன்படுத்திய ஆடைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


மொரட்டுமுல்ல வில்லோரவத்தை பிரதேசத்தில் வசிக்கும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரை கொலை செய்வதற்காக கடந்த 6ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் குறித்த சந்தேகநபர்கள் வீட்டிற்கு வந்து முன்பக்க கதவைத் தட்டியுள்ளனர். கதவைத் திறக்க மறுத்ததால் சமையலறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்துள்ளனர்


அப்போது, கடத்தல்காரர் வீட்டில் இல்லாததால் மாறுவேடத்தில் வந்திருந்தவர்கள் கடத்தல்காரரின் மனைவி மற்றும் மனைவியின் தாயாரை மண்டியிட வைத்து தங்க ஆபரணங்கள் மற்றும் சொத்துக்கள் மற்றும் 23,000  ரூபாய் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.


கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்களுக்குள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மொரட்டுமுல்ல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பிரதான சந்தேகநபரை மொரட்டுவ பஸ் நிலையத்தில் வைத்து கைதுசெய்தனர்.


 சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் ஏ.எஸ்.பி எனப்படும் புனைப்பெயரால் அழைக்கப்படும் குற்றவாளி என்றும் மற்றைய சந்தேக நபர்கள் கொலை உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சந்தேகநபர்களை மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் மொரட்டுமுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தினேஷ் சந்திரசிறியின் பணிப்புரையின் பேரில் மேலதிக  விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 



Read More

Previous Post

காணாமல்போனதாக தேடப்பட்ட திலகவதி பாதுகாப்பாக உள்ளார் ;பெந்தோங் காவல்துறை | Makkal Osai

Next Post

பெட்ரோல் பங்கில் பிரார்த்தனை செய்துவிட்டு ரூ.1.57 லட்சத்தை திருடிய மர்ம நபர் | man steals money after praying at petrol pump

Next Post
பெட்ரோல் பங்கில் பிரார்த்தனை செய்துவிட்டு ரூ.1.57 லட்சத்தை திருடிய மர்ம நபர் | man steals money after praying at petrol pump

பெட்ரோல் பங்கில் பிரார்த்தனை செய்துவிட்டு ரூ.1.57 லட்சத்தை திருடிய மர்ம நபர் | man steals money after praying at petrol pump

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin