ஜூலை 4ம் தேதியில் இருந்து இந்த பிரச்னை சென்று கொண்டிருக்கிறது. இந்த பிரச்னைக்கு யார் முழுக்க முழுக்க காரணம், விசிக தான்! விசிக என்றால், அக்கட்சியில் இருக்கும் ஒரு முக்கிய பிரமுகர் தான் காரணம். கூட்டணி கட்சிகள் மாறுபட்ட கருத்தை தெரிவிக்கலாம். ஆனால், முக்கிய பிரச்னையை தொல்லை செய்வதாக இருக்கக் கூடாது. ஆதவ் அர்ஜூனா கொடுத்த மூன்று தொலைக்காட்சி பேட்டிகள், திருமாவின் தொடர் அறிக்கைகள், அதற்குப் பின் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் அவருடைய மேடை பேச்சு. அந்த மேடையில் அவர் ஒரு கோடு கிழித்துவிட்டார். இதுக்கு பிறகு அவர் எப்படி விசிக.,வில் தொடர்வார் என்று எனக்குத் தெரியவில்லை.

