லக்னௌவில் ரயிலில் அடிபட்ட நிலையில் காவல் உதவி ஆய்வாளரின் சடலம் மீட்கப்பட்டதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
உத்தர பிரதேச மாநிலம், மஜ்கவன் கிராமத்திற்கு அருகே புதன்கிழமை மதியம் 2 மணியளவில் நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டது குறித்து காவல்துறைக்கு அழைப்பு வந்திருக்கிறது.
தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை அடையாளம் காண முயன்றனர்.
ஆனால் உடலை அடையாளம் கண்டறிய முடியவில்லை என காவல்துறையினர் கூறினர். பிறகு அந்த உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

