அமெரிக்காவின் ஹம்போல்ட் கவுண்டி, சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி கடலில் வியாழக்கிழமை காலை 10:44 மணியளவில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும், அமெரிக்காவின் மேற்கு – கிழக்குப் பகுதிகளில் சுனாமி ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்தனர். சுனாமி எச்சரிக்கையைத் தொடந்து, அங்குப் பொருத்தப்படும் எச்சரிக்கை சைரன்கள், பலகைகள் அந்தப் பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. கலிபோர்னியாவின் வடக்குப் பகுதியில் உள்ள மக்களுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டன.

