• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஐடி பங்குகளுக்கு நல்ல ஆதரவு: சென்செக்ஸ், நிஃப்டி முன்னேற்றம்!

GenevaTimes by GenevaTimes
December 6, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஐடி பங்குகளுக்கு நல்ல ஆதரவு: சென்செக்ஸ், நிஃப்டி முன்னேற்றம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நமது நிருபா்

இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் அதிகம் முன்னேற்றம் கண்டன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. குறிப்பாக, கடந்த சில நாள்களாக தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வந்த அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் இரண்டு தினங்களாக பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தி வருவது சந்தைக்கு சாததகமாக அமைந்தது. ரியால்ட்டி தவிர ஐடி, வங்கிகள், ஆட்டோ, நிதிநிறுவனங்கள் உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.55 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.458.17 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.1,797.60 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.900.62 கோடிக்கு பங்குகளை விற்றிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 226.41 புள்ளிகள் கூடுதலுடன் 81,182.74-இல் தொடங்கி 80,467.37 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 82,317.74 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 809.53 புள்ளிகள் (1.00 சதவீதம்) கூடுதலுடன் 81,765.86-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,083 பங்குகளில் 2,130 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1,841பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 112 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

டிசிஎஸ், இன்ஃபோஸிஸ் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், டைட்டன், பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், டெக் மஹிந்திரா உள்பட 27 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், என்டிபிசி, ஏசியன் பெயிண்ட், இண்டஸ் இண்ட் பேங்க் ஆகிய 3 பங்குகள் மட்டும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 241புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 71.70 புள்ளிகள் கூடுதலுடன் 24,539.15-இல் தொடங்கி 24,295.55 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,857.75 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 240.95 புள்ளிகள் (0.98 சதவீதம்) கூடுதலுடன் 24,708.40-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 41 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 9 பங்குகள் வீழ்ச்சிப் ட்டியலிலும் இருந்தன.

Read More

Previous Post

உலக செஸ் சாம்பியன்ஷிப் 9-வது சுற்றும் டிரா | World Chess Championship 9th Round Draw

Next Post

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்க தடை – கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கண்டனம்

Next Post
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்க தடை – கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்க தடை – கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin