புது தில்லி: கடந்த ஒரு சில மாதங்களாக நாள்தோறும் புது தில்லி அதன் காற்று மாசுவால் முக்கிய செய்தியில் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் மற்றொரு மோசமான செய்தியுடன் தில்லி இன்று தலைப்புச் செய்தியாகியிருக்கிறது.
தற்போது டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தைக் கடந்துகொண்டிருக்கிறோம். ஆனால், புது தில்லியில் பல இடங்களில் பட்டாம்பூச்சிகள் பறந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அது நல்ல அறிகுறி இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புது தில்லியில் கடுமையான குளிர் நிலவ வேண்டிய டிசம்பவர் மாதத்தில் பட்டாம்பூச்சிகள் பறந்துகொண்டிருக்கிறது என்றால், தற்போது ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தின் காலநிலைதான் நகரில் நிலவுகிறது என்று பொருள். இந்த முரண்பாடு பட்டாம்பூச்சிகளுடன் நின்றுவிடவில்லை.

&w=1200&resize=1200,675&ssl=1)