• Login
Wednesday, May 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆசியாவின் மிகச் சிறந்த நாணயங்கள்: இந்திய ரூபாய்க்கும் இடம் | Asia s best currencies Indian rupee also has a place

GenevaTimes by GenevaTimes
December 4, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ஆசியாவின் மிகச் சிறந்த நாணயங்கள்: இந்திய ரூபாய்க்கும் இடம் | Asia s best currencies Indian rupee also has a place
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஆசியாவில் மிகச்சிறந்த செயல்பாட்டைக் கொண்ட நாணயங்களில் ஒன்றாக இந்தியா ரூபாயும் இடம்பெற்றுள்ளதாக மக்களவையில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த எழுத்துப்பூர்வமாக பதில்: மத்திய கிழக்கு நாடுகளின் நெருக்கடி, சர்வதேச சவால்களுக்கு இடையிலும் ஆசிய அளவில் சிறந்த செயல்பாட்டைக் கொண்ட நாணயங்களில் ஒன்றாக இந்தியா ரூபாய் உருவெடுத்துள்ளது. அது தனக்கான இடத்தை வலுவான நிலையில் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆசிய அளவில் ரூபாயின் செயல்பாடு வலிமையாக இருப்பது இந்தியாவின் வலுவான பொருளாதார அடிப்படையை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

அமெரிக்க டாலரில் காணப்பட்ட ஒட்டுமொத்த வலுவான நிலையால் இந்திய ரூபாயின் மதிப்பு நவம்பர் 19 நிலவரப்படி 1.4 சதவீதம் சரிவை சந்தித்தது. அதேசமயம், ஆசிய அளவில் ஜப்பானின் யென் 8.8 சதவீதமும், தென் கொரியாவின் வோன் 7.5 சதவீதமும் சரிவடைந்துள்ளன. ஜி10 நாடுகளின் கரன்சி (பிரிட்டன் பவுண்ட் தவிர்த்து ) அனைத்தும் நடப்பாண்டில் 4 சதவீதத்துக்கும் அதிகமாகவே குறைந்துள்ளன.

அவற்றுடன் ஒப்பிடும்போது இந்திய கரன்சியின் நிலை வலுவான இடத்தில் உள்ளது. இது, இந்தியாவின் உறுதியான மற்றும் நெகிழ்வான பொருளாதார அடிப்படை, பேரியல் பொருளாதாரம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு சான்றாக அமைந்துள்ளது. இவ்வாறு பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

துபாய்க்கு வேலைக்காக சென்று சிக்கியுள்ள 16 இளைஞர்களை மீட்க ஆந்திர அரசு நடவடிக்கை | ap government takes steps to rescue 16 youths stranded in Dubai

Next Post

ஒரே காற்று மாசு.. டெல்லியில் வாழ விருப்பமில்லை – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஓபன் டாக் | Makkal Osai

Next Post
ஒரே காற்று மாசு.. டெல்லியில் வாழ விருப்பமில்லை – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஓபன் டாக் | Makkal Osai

ஒரே காற்று மாசு.. டெல்லியில் வாழ விருப்பமில்லை - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஓபன் டாக் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin