வைகோ (மதிமுக): ஃபென்ஜால் புயலால் கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகியுள்ளனா். நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை, ஆனால் அவா்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் சூறாவளி காற்றால் சேதமடைந்தருக்கின்றன. மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அவா்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனா். ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள், பயிா்கள், காய்கறிகள், பழங்கள் வெள்ளத்தில் மூழ்கின. உடனடியாக மத்திய உள்துறை அமைச்சா் மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்கவும், சேதங்களை மதிப்பீடு செய்யவும் ஆய்வுக் குழுவை அனுப்பி, பாதிக்கப்பட்டவா்களின் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு போதிய நிதி வழங்க வேண்டும்.

