சீனாவின் மையப் பிரதேசத்தில் பெரிய அளவிலான தங்க இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் தோராய 10000 மெட்ரிக் டன் அளவு உயர் தர தங்கம் இருக்கும் என கணிக்கின்றனர்.
சீன ஊடகத்தின் செய்திப்படி, இதன் மதிப்பு 83 பில்லியன் டாலர்கள்.
தற்போதுவரை உலகின்மிகப் பெரிய தங்க வயலாக கருதப்பட்ட தென்னாப்பிரிக்காவின் சௌத் டீப் சுரங்கத்தை பின்னுக்குத்தள்ளியிருக்கிறது. சௌத் டீ வயலில் 900 மெட்ரிக் டன் தங்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஹூனான் மாகாணம், பிங்ஜியாங் மாவட்டத்தில் இந்த தங்க இருப்பு உள்ளது. இங்கு 2 கிலோமீட்டர்வரை ஆழமான தங்க வரிகள் (தங்க நரம்புகள் – Gold Vein) கண்டறியப்பட்டுள்ளன.

