• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வெடிப்புச் சம்பவம்: சட்டம் – ஒழுங்கு பிரச்சினையில் அமித் ஷா மீது டெல்லி முதல்வர் அதிஷி சாடல் | Atishi says BJP Amit Shah responsible for blast in Rohini

GenevaTimes by GenevaTimes
November 28, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
வெடிப்புச் சம்பவம்: சட்டம் – ஒழுங்கு பிரச்சினையில் அமித் ஷா மீது டெல்லி முதல்வர் அதிஷி சாடல் | Atishi says BJP Amit Shah responsible for blast in Rohini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: தேசிய தலைநகரில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தவறிவிட்டது. இந்த நிலைக்கு பாஜகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்தான் காரணம் என டெல்லி முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.

தலைநகர் டெல்லியின் ரோகினியில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் அமைந்துள்ள பிவிஆர் மல்டிபிளெக்ஸ் திரையரங்குக்கு அருகே உள்ள இனிப்பகத்துக்கு எதிரே மர்மமான முறையில் நடந்த வெடிப்புச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி முதல்வர் அதிஷி இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “தேசிய தலைநகரில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தவறிவிட்டது. இந்தப் பிரசாந்த விஹார் பகுதியில் 2 மாதங்களில் 2-வது முறையாக இதுபோல சம்பவம் நடந்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒரு பெரிய தொய்வு ஏற்பட்டிருப்பதை இந்தச் சூழ்நிலை சுட்டிக்காட்டுகிறது. இந்த நிலைக்கு பாஜகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்தான் காரணம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லிவாசிகளின் பாதுகாப்பை புறக்கணிப்பதாக தெரிகிறது” என்றார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “இதுபோன்ற சம்பவங்கள் டெல்லியில் அதிகரிக்கும் பாதுகாப்பின்மை உணர்வை காட்டுவதாக உள்ளது. டெல்லியில் எங்கு பார்த்தாலும் அச்சமான சூழல் நிலவுகிறது. இரவு 7 மணிக்கு மேல் பெண்கள் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். மேலும் தங்கள் மகள்கள் வெளியில் செல்வதைப் பற்றி பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள்” என்றார்.

அடுத்த ஆண்டு, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், சட்டம் – ஒழுங்கு பிரச்சினை தலை தூக்கியிருப்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.



Read More

Previous Post

யாழில் அநுர ஆட்சியில் விடுவிக்கப்படவுள்ள இராணுவ வசமான காணிகள்!

Next Post

இந்து மத தலைவர் கைதுக்கு ஷேக் ஹசீனா கண்டனம் – உடனடியாக விடுவிக்க வலியுறுத்தல் | Bangladesh’s deposed PM Sheikh Hasina condemns arrest of Hindu spiritual leader, demands his release

Next Post
இந்து மத தலைவர் கைதுக்கு ஷேக் ஹசீனா கண்டனம் – உடனடியாக விடுவிக்க வலியுறுத்தல் | Bangladesh’s deposed PM Sheikh Hasina condemns arrest of Hindu spiritual leader, demands his release

இந்து மத தலைவர் கைதுக்கு ஷேக் ஹசீனா கண்டனம் - உடனடியாக விடுவிக்க வலியுறுத்தல் | Bangladesh’s deposed PM Sheikh Hasina condemns arrest of Hindu spiritual leader, demands his release

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin