• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சைம் அயூப் 62 பந்துகளில் 113 ரன்கள் விளாசல்: ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாக். | Pakistan defeated Zimbabwe by 10 wickets second odi

GenevaTimes by GenevaTimes
November 27, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சைம் அயூப் 62 பந்துகளில் 113 ரன்கள் விளாசல்: ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாக். | Pakistan defeated Zimbabwe by 10 wickets second odi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சைம் அயூப்பின் அதிரடி சதத்தால் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.

புலவாயோ நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 32.3 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டியோன் மேயர்ஸ் 33, சீயன் வில்லியம்ஸ் 31, கேப்டன் கிரெய்க் எர்வின் 18, சிகந்தர் ராஸா 17 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அறிமுக சுழற்பந்து வீச்சாளரான அப்ரார் அகமது 8 ஓவர்களை வீசி 2 மெய்டன்களுடன் 33 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான சல்மான் ஆகா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

146 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 54 பந்துகளில் தனது முதல் சதத்தை விளாசிய இடது கை பேட்ஸ்மேனான சைம் அயூப் ஒட்டுமொத்தமாக 62 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய அப்துல்லா ஷபிக் 48 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்தார்.

10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொரை 1-1 என சமநிலையை அடையச் செய்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி நாளை (28-ம் தேதி) நடைபெறுகிறது.

3-வது விரைவு சதம்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியின் சைம் அயூப் 54 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானின் மூன்றாவது அதிவேக சதம் இதுவாகும். இதற்கு முன்னர் ஷாகிப் அப்ரிடி 1996-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 37 பந்துகளிலும், 2005-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக 45 பந்துகளிலும் சதம் அடித்திருந்தார்.



Read More

Previous Post

மகாராஷ்டிராவில் ஷிண்டேவுக்கு 10 இடங்கள் ‘மிஸ்’ ஆக ராஜ் தாக்கரே கட்சி காரணமானது எப்படி? | Shinde s Shiv Sena loses 10 seats to Raj Thackeray s MNS in Maharashtra

Next Post

Sattur Karasev: செய்முறை, சேர்மானமெல்லாம் ஒன்னா இருந்தாலும் டேஸ்ட் வேற… சாத்தூர் சேவு சீக்ரெட் இது தான்…

Next Post
Sattur Karasev: செய்முறை, சேர்மானமெல்லாம் ஒன்னா இருந்தாலும் டேஸ்ட் வேற… சாத்தூர் சேவு சீக்ரெட் இது தான்…

Sattur Karasev: செய்முறை, சேர்மானமெல்லாம் ஒன்னா இருந்தாலும் டேஸ்ட் வேற... சாத்தூர் சேவு சீக்ரெட் இது தான்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin