Tamil Live Breaking News : அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது புயல்
தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. நாகையில் இருந்து 400 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ மற்றும் சென்னையில் இருந்து 590 கி.மீ தொலைவில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது. 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
Tamil Live Breaking News : டிப்ளமோ தேர்வுகள் ஒத்திவைப்பு
இன்று (நவம்பர் 27) நடைபெற இருந்த டிப்ளமுா தேர்வுகள் அனைத்தும் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்ப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
Tamil Live Breaking News : சென்னை மழை குட்நியூஸ் சென்ன வெதர்மேன்
சென்னையில் நேற்று போல் இன்று(நவ.27) மழை இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்து்ளளார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகரும் போதுதான் சென்னையில் மிக கனமழை பெய்யும்; நாகை, மயிலாடுதுறை. திருவாரூர், கடலூர் மற்றும் காரைக்காலில் காலையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, பெரம்பலூரிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)