• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மெக்சிகோ, சீன பொருட்களின் இறக்குமதிக்கு கூடுதல் வரி: புதிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டம் | Trump tariff threat on Canada, Mexico and China roils the world

GenevaTimes by GenevaTimes
November 26, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
மெக்சிகோ, சீன பொருட்களின் இறக்குமதிக்கு கூடுதல் வரி: புதிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டம் | Trump tariff threat on Canada, Mexico and China roils the world
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மெக்சிகோ, சீனா, கனடா நாட்டிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்க டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அடுத்த அதிபராக வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தலா 25 சதவீதமும், சீனாவின் இறக்குமதிக்கு 10 சதவீதமும் கூடுதல் வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரங்களில், அமெரிக்கா உடன் இந்தியா மிகப் பெரிய வர்த்தக துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய நிலையில் இந்த வரி விதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம், உற்பத்தி துறைக்கான வேலைவாய்ப்புகளை மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்ப கொண்டு வரவும், வர்த்தக பேரங்களை அதிகரிக்கவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவிற்கு சுமார் 5.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை சுங்க வரி இல்லாமல் ஜிஎஸ்பி திட்டத்தின் கீழ் இந்தியா ஏற்றுமதி செய்து மிகப்பெரும் பலனை அடைந்து வந்தது. ஆனால், கடந்த 2019-ம் ஆண்டில் இந்த அந்தஸ்த்தை இந்தியா இழந்தது.

இதனிடையே, அமெரிக்காவுக்கு பெருமளவிலான போதைப் பொருள்கள் குறிப்பாக, செயற்கை ஓபியாய்டு ஃபென்டானில் என்ற போதைப் பொருள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்கு கடத்தப்படுவதாக புகார் உள்ளது. இதுதொடர்பாக பலமுறை எச்சரித்தும் சீன அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். எனவே, போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் வரை சீன இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதை பெர்ன்ஸ்டைன் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.



Read More

Previous Post

ரூ. 639.15 கோடிக்கு 182 வீரர்களை வாங்கிய அணிகள்… 2 நாட்கள் நடந்த ஏலத்தின் ஹைலைட்ஸ்… – News18 தமிழ்

Next Post

சிம்பாங் பூலாய் -கேமரன் ஹைலேண்ட்ஸ் பாதை இரவில் வாகனம் ஓட்டுவதற்கு ஏற்புடையதல்ல என்கிறது REACH அமைப்பு | Makkal Osai

Next Post
சிம்பாங் பூலாய் -கேமரன் ஹைலேண்ட்ஸ் பாதை இரவில் வாகனம் ஓட்டுவதற்கு ஏற்புடையதல்ல என்கிறது REACH அமைப்பு | Makkal Osai

சிம்பாங் பூலாய் -கேமரன் ஹைலேண்ட்ஸ் பாதை இரவில் வாகனம் ஓட்டுவதற்கு ஏற்புடையதல்ல என்கிறது REACH அமைப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin