• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கடும் அச்சுறுத்தல் : தனிப்பட்ட பாதுகாப்பு கோரும் வைத்தியர் அர்ச்சுனா

GenevaTimes by GenevaTimes
November 25, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
கடும் அச்சுறுத்தல் : தனிப்பட்ட பாதுகாப்பு கோரும் வைத்தியர் அர்ச்சுனா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையின்(sri lanka) 10வது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது தனது செயற்பாடுகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களை அடுத்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்(archuna) தனிப்பட்ட பாதுகாப்பை கோரியுள்ளார்.

கடந்த வாரம் இடம்பெற்ற 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து கொண்டு நகர மறுத்துவிட்டார், அதே நேரத்தில் அவர் இனவாத அறிக்கைகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

 கடும் அச்சுறுத்தல்



இந்த நிலையில்,நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இந்த சம்பவத்தினால் தாம் கடும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

கடும் அச்சுறுத்தல் : தனிப்பட்ட பாதுகாப்பு கோரும் வைத்தியர் அர்ச்சுனா | Doctor Arjuna Seeks Personal Protection



“நாடாளுமன்ற ஆசனத்தில் நடந்த சம்பவத்தால் என்னால் வீதியில் நடக்கக்கூட முடியவில்லை. ஊடகங்கள் 45-50 நிமிட பேட்டி எடுத்தன. நான் சாப்பிட்டுவிட்டேனா என்று அவர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு நான் ஆம் என்று பதிலளித்தேன். அப்போது அவர்கள் நான் விடுதலைப் புலிகளின் அங்கமா என்று கேள்வி எழுப்பினர் அதற்கு நான் இல்லை என்று பதிலளித்தேன்.

தெருவில் நடக்க முடியாத நிலை 

ஆனால், இரண்டாவது கேள்விக்கு எனது பதிலைத் தவிர்த்துவிட்டனர், என்னால் தெருவில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,” என்றார்.

கடும் அச்சுறுத்தல் : தனிப்பட்ட பாதுகாப்பு கோரும் வைத்தியர் அர்ச்சுனா | Doctor Arjuna Seeks Personal Protection



நிலைமையை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் தனக்கு வழங்கப்படும் தேவையான பாதுகாப்பை எவ்வாறு மற்றும் எப்போது ஏற்பாடு செய்ய முடியும் என நாடாளுமன்ற அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.


நாடாளுமன்ற உறுப்பினருக்குப் பதிலளித்த நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் சமிந்த குலரத்ன, இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பொது பாதுகாப்பு அமைச்சிடம் எழுத்துமூலக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

நான்கு பேர் கொண்ட குடும்பம் வாழ்வதற்கு மாதம் RM 5,854 தேவை – Malaysiakini

Next Post

சட்டப்பேரவைக்கூட்டத்தொடர் முதல் இரட்டை இலை சின்ன வழக்கு வரை.. தமிழ்நாட்டின் முக்கிய 10 செய்திகள்

Next Post
சட்டப்பேரவைக்கூட்டத்தொடர் முதல் இரட்டை இலை சின்ன வழக்கு வரை.. தமிழ்நாட்டின் முக்கிய 10 செய்திகள்

சட்டப்பேரவைக்கூட்டத்தொடர் முதல் இரட்டை இலை சின்ன வழக்கு வரை.. தமிழ்நாட்டின் முக்கிய 10 செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin