ஜோர்தானின் தலைநகர் அம்மானில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே மர்மநபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தை அறிந்த பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்த போது குறித்த நபர் பொலிஸார் மீது கொண்ட தாக்குதலில் மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த நபர் கொல்லப்பட்டார்.
இச்சமபவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
பலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோர்தானில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
The post இஸ்ரேல் தூதரகம் அருகே மர்மநபர் துப்பாக்கிச் சூடு appeared first on Thinakaran.
