• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகை… சாதனை படைத்த ஸ்ரேயஸ் ஐயர் – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 24, 2024
in விளையாட்டு
Reading Time: 3 mins read
0
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகை… சாதனை படைத்த ஸ்ரேயஸ் ஐயர் – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



November 24, 2024, 5:26 pm IST

IPL Auction 2025 Live Day 1: டெல்லி அணியில் கே.எல்.ராகுல்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி இதற்கு முன்னர் லக்னோ அணிக்கு கேப்டனாக இருந்தார்.

இவரை ஏலத்தில் எடுக்க பெங்களூரூ, கொல்கத்தா, டெல்லி, சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் கடும்போட்டியிட்ட நிலையில், அவரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி

November 24, 2024, 5:23 pm IST

IPL Auction 2025 Live Day 1: சிராஜுக்கு ஆர்.டி.எம் பயன்படுத்தாத பெங்களூரு அணி

முகமது சிராஜுக்கு பெங்களூரூ அணி ஆர்.டி.எம் பயன்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவரை எடுக்க ஆர்.சி.பி அணி முயலவில்லை.

எனவே அவர் லக்னோ அணியால் ரூ.12.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

November 24, 2024, 5:18 pm IST

IPL Auction 2025 Live Day 1: பெங்களூரூ அணியில் லியாம் லிவிங்ஸ்டன்

பஞ்சாப் அணிக்கு விளையாடிய லியாம் லிவிங்ஸ்டனை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரூ அணிகள் போட்டி போட்ட நிலையில், ரூ.8.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரூ அணி.

விளம்பரம்
November 24, 2024, 5:16 pm IST

IPL Auction 2025 Live Day 1: குஜராத் அணியில் சிராஜ்

பெங்களூரூ அணியில் விளையாடிய இந்திய வேகப்பந்துவீச்சாளரான சிராஜ்-ஐ குஜராத் அணி ரூ.12.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

November 24, 2024, 5:14 pm IST

IPL Auction 2025 Live Day 1: அதிக விலைக்கு ஏலம் போன சாஹல்

ஐபிஎல் ஏலத்தில் இதுவரை அதிக தொகைக்கு ஏலம் போன இந்திய ஸ்பின்னர் என்ற சாதனையை படைத்தார் யுஸ்வேந்திர சாஹல்.

பஞ்சாப் கிங்ஸ் அணி சாஹலை ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

November 24, 2024, 5:13 pm IST

IPL Auction 2025 Live Day 1: பஞ்சாப் அணியில் சாஹல்

சுழற்பந்து வீச்சாளர் சாஹலை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே, குஜராத் அணிகள் ஆர்வம் காட்டின. ஏலம் ரூ.5 கோடிக்கு மேல் சென்ற சிஎஸ்கே ரேஸில் இருந்து விலக பஞ்சாப், குஜராத்போட்டியிட்டது. இறுதியில் லக்னோ, சன்ரைசர்ஸ் அணிகளும் ஆர்வம் காட்டியதால் சாஹல் மீதான ஏல தொகை ரூ.14 கோடிக்கு சென்றது. இறுதியாக ரூ.18 கோடிக்கு சாஹலை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

விளம்பரம்
November 24, 2024, 4:57 pm IST

IPL Auction 2025 Live Day 1: லக்னோ அணியில் மில்லர்

தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் டேவிட் மில்லரை ஏலத்தில் எடுக்க டெல்லி, ஆர்சிபி அணிகள் ஆர்வம் காட்டின. இறுதியாக லக்னோ அணி ரூ.7.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

November 24, 2024, 4:53 pm IST

IPL Auction 2025 Live Day 1: ரூ.10 கோடிக்கு ஏலம் போன முகமது ஷமி

முகமது ஷமியை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே, கொல்கத்தா அணிகள் ஆர்வம் காட்டின. ரூ.8 கோடிக்கு மேல் ஏலம் சென்ற போது சிஎஸ்கே அணி ரேஸில் இருந்து பின்வாங்கியது. ஆனால் ஷமியை வாங்க லக்னோ ஆர்வம் காட்டியதால் ஏலம் ரூ.10 கோடியை எட்டியது. இறுதியாக சன்ரைசரஸ் அணி முகமது ஷமியை ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

November 24, 2024, 4:55 pm IST

IPL Auction 2025 Live Day 1: முதல் செட்டில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்

அர்ஷ்தீப் சிங் – பஞ்சாப் (ரூ.18 கோடி)
ஷ்ரேயாஸ் ஐயர் – பஞ்சாப் (ரூ.26.75 கோடி)
ககிசோ ரபாடா – குஜராத் (ரூ.10.75 கோடி)
ஜோஸ் பட்லர் – குஜராத் (ரூ.15.75 கோடி)
மிட்செல் ஸ்டார்க் – டெல்லி (ரூ.11.75 கோடி)
ரிஷப் பந்த் – லக்னோ (ரூ.27 கோடி)

விளம்பரம்
November 24, 2024, 4:50 pm IST

IPL Auction 2025 Live Day 1: முதல் செட்டில் மட்டும் ரூ.110கோடி

ஐபிஎல் ஏலத்தில் முதல் செட்டில் இடம்பெற்ற வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்கு மட்டும் ரூ.110 கோடி அணிகளால் செலவு செய்யப்பட்டுள்ளது.

November 24, 2024, 4:48 pm IST

IPL Auction 2025 Live Day 1: இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்

1. ரிஷப் பந்த் – ரூ.27 கோடி (2024)
2. ஸ்ரேயஸ் ஐயர் – ரூ.26.75 கோடி (2024)
3. மிட்செல் ஸ்டார்க் – ரூ.24.75 கோடி (2023)
4. பேட் கம்மின்ஸ் – ரூ.20.50 கோடி (2023)
5. சாம் கரண் – ரூ.18.75 கோடி (2022)

November 24, 2024, 4:44 pm IST

IPL Auction 2025 Live Day 1: ரிஷப் பந்திற்கு அடித்த ஜாக்பாட்

ஐபிஎல் ஏல வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டுள்ளார் ரிஷப் பந்த். முதல் சுற்று ஏல வீரர்கள் பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. ஸ்ரேயாஸ் தான் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற ஆரவாரம் குறைவதற்குள் ரிஷப் பந்தை லக்னோ அணி ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை ரிஷப் பந்த் தற்போது பெற்றுள்ளார்.

விளம்பரம்
November 24, 2024, 4:40 pm IST

IPL Auction 2025 Live Day 1: ரிஷப் பந்த் ரூ.27 கோடிக்கு ஏலம்

ரிஷப் பந்திற்கு பெங்களூரூ, லக்னோ, ஐதராபாத், கொல்கத்தா அணிகள் கடுமையாக போட்டியிட்டு வந்த நிலையில், லக்னோ அணி ரூ.27 கோடி க்கு ஏலத்தில் எடுத்தது.

ரூ.20.75 கோடி இருந்தபோது டெல்லி அணி ஆர்.எஇ.எம் பயன்படுத்திய நிலையில், ஒரே அடியாக ரூ.27 கோடியை கேட்டது லக்னோ அணி. இதனால் ரூ.27 கோடிக்கு லக்னோ அணி ரிஷப் பந்தை ஏலத்தில் எடுத்தது.

November 24, 2024, 4:30 pm IST

IPL Auction 2025 Live Day 1: டெல்லி அணியில் மிட்செல் ஸ்டார்க்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை ஏலத்தில் எடுக்க மும்பை, டெல்லி, கொல்கத்தா அணிகள் கடும் போட்டியிட்டன. இறுதியாக ரூ.11.75 கோடிக்கு டெல்லி அணி மிட்செல் ஸ்டார்க்கை ஏலத்தில் எடுத்தது.

November 24, 2024, 4:27 pm IST

IPL Auction 2025 Live Day 1: குஜராத் அணியின் ஓபனர்களாக இருக்கப்போகும் கில் – பட்லர்

ஐபிஎல் 2025ஆம் ஆண்டிற்கான ஏலத்தில் ரூ.15.75 கோடிக்கு குஜராத் அணி ஜாஸ் பட்லரை ஏலத்தில் எடுத்தது.

இதனால் ஜாஸ் பட்லர் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் அந்த அணியின் ஓபனர்களாக களமிறங்க உள்ளனர். மேலும் ரபாடா பவுலிங்கில் மிரட்ட உள்ளார்.

விளம்பரம்
November 24, 2024, 4:23 pm IST

IPL Auction 2025 Live Day 1: குஜராத் அணியில் ஜாஸ் பட்லர்

இங்கிலாந்து அதிரடி வீரர் ஜாஸ் பட்லரை ஏலத்தில் எடுக்க பஞ்சாப், குஜராத் அணிகள் போட்டியிட்டன. இறுதியாக ஜோஸ் பட்லரை ரூ.15.75 கோடிக்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

November 24, 2024, 4:31 pm IST

IPL Auction 2025 Live Day 1: ஐபிஎல் வரலாற்றில் காஸ்ட்லி ஷ்ரேயாஸ்

ஐபிஎல் 2024 சாம்பியன் கோப்பையை கொல்கத்தா அணிக்கு பெற்று கேப்டன் ஷரேயாஸ் ஐயர் 3வது வீரராக ஏலத்திற்கு வந்தார். ஷ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுக்க ஆரம்பம் முதலே கொல்கத்தா அணி தீவிரம் காட்டியது. 10 கோடி ரூபாய்க்கு மேலும் ஏலம் சென்றதும் கொல்கத்தா ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. ஆனால் டெல்லி, பஞ்சாப் அணிகள் ஏலத்தில் எடுக்க போட்டியிட்டன. ஒரு கட்டத்தில் ரூ.26 கோடிக்கு மேல் ஏலம் சென்ற போதும் டெல்லி – பஞ்சாப் அணிகள் கடும் போட்டியிட்டன. இறுதியாக பஞ்சாப் அணி ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக ஷ்ரேயாஸ் உள்ளார்.

November 24, 2024, 4:15 pm IST

IPL Auction 2025 Live Day 1: வரலாற்றில் முதன்முறையாக ஷ்ரேயாஸ் ஐயர்

ஐபிஎல் 2024 சாம்பியன் கோப்பையை கொல்கத்தா அணிக்கு பெற்று கேப்டன் ஷரேயாஸ் ஐயர் 3வது வீரராக ஏலத்திற்கு வந்தார். ஷ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுக்க ஆரம்பம் முதலே கொல்கத்தா அணி தீவிரம் காட்டியது. 10 கோடி ரூபாய்க்கு மேலும் ஏலம் சென்றதும் கொல்கத்தா ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. ஆனால் டெல்லி, பஞ்சாப் அணிகள் ஏலத்தில் எடுக்க போட்டியிட்டன. ஒரு கட்டத்தில் ரூ.26 கோடிக்கு மேல் ஏலம் சென்ற போதும் டெல்லி – பஞ்சாப் அணிகள் கடும் போட்டியிட்டு வருகின்றன. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக ஷ்ரேயாஸ் உள்ளார்.

விளம்பரம்
November 24, 2024, 4:05 pm IST

IPL Auction 2025 Live Day 1: ஐபிஎல் ஏலத்தை நடத்தும் மல்லிகா சாகர் யார் தெரியுமா?

November 24, 2024, 4:01 pm IST

IPL Auction 2025 Live Day 1: குஜராத் அணியில் ராபடா

தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ராபடாவை ஏலத்தில் எடுக்க ஆர்சிபி, குஜராத், மும்பை அணிகள் ஆரம்பத்தில் போட்டியிட்டன. இறுதியாக குஜராத் அணி ரூ.10.75 கோடிக்கு ராபடா ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

November 24, 2024, 3:57 pm IST

IPL Auction 2025 Live Day 1: அர்ஷதீப் சிங் ரூ.18 கோடிக்கு ஏலம்

ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் வீரராக அர்ஷ்தீப் சிங்கை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே, டெல்லி, குஜராத், ஆர்சிபி அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. டெல்லி அணி ஆரம்பத்தில் இருந்து அர்ஷ்தீப் சிங்கை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்தது. ஏலம் 10 கோடி ரூபாயை கடந்த நிலையில் இறுதியாக ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் அணிகள் போட்டியிட்டன. இறுதியில் ரூ.8 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ‘ரைட் டூ மேட்ச்’ மூலம் அர்ஷ்தீப் சிங்கை ஏலத்தில் எடுத்தது.

விளம்பரம்
November 24, 2024, 3:45 pm IST

IPL Auction 2025 Live Day 1: வரலாற்றில் ஒரே வீரர்… யார் தெரியுமா?

November 24, 2024, 3:42 pm IST

IPL Auction 2025 Live Day 1: முதல் செட்டில் யார் யார்?

ஐபிஎல் ஏலத்திற்கான முதல் செட்டில் பட்லர், ஐயர், பந்த், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப், ஸ்டார்க் ஆகியோர் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

November 24, 2024, 3:40 pm IST

IPL Auction 2025 Live Day 1: தொடங்கியது ஐபிஎல் ஏலம்..

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 2025ஆம் ஆண்டிற்கான ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் தொடங்கியது.

விளம்பரம்
November 24, 2024, 1:26 pm IST

IPL Auction 2025 Live Day 1: 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தை எங்கே பார்ப்பது?

2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தை எங்கே அப்போது பார்ப்பது தெரியுமா? தெரிந்துகொள்ள
இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.
November 24, 2024, 1:10 pm IST

IPL Auction 2025 Live Day 1: எந்த அணிகளிடம் எவ்வளவு தொகை உள்ளது?

November 24, 2024, 12:59 pm IST

IPL Auction 2025 Live Day 1: ஐபிஎல் ஏலம் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்

2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இன்று நடைபெறவுள்ளது. ஏலம் குறித்தான அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.

விளம்பரம்
  • First Published : November 24, 2024, 12:56 pm IST

Read More

Previous Post

சிட்டுக்குருவிகளுக்காக சென்னையில் இயங்கும் அறக்கட்டளை – ‘மனதின் குரலில்’ விவரித்த பிரதமர் மோடி | Koodugal create awareness about house sparrows among school children PM praises mann ki baat

Next Post

‘டேட்டிங்’ செல்லும் ஊழியர்களுக்கு ரொக்கப்பரிசு அறிவித்த நிறுவனம் | Makkal Osai

Next Post
‘டேட்டிங்’ செல்லும் ஊழியர்களுக்கு ரொக்கப்பரிசு அறிவித்த நிறுவனம் | Makkal Osai

'டேட்டிங்' செல்லும் ஊழியர்களுக்கு ரொக்கப்பரிசு அறிவித்த நிறுவனம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin