ஷா ஆலம்:
கடந்த வியாழக்கிழமை பூலாவ் கெத்தம் அருகே கடலில் விழுந்ததாகக் கூறப்படும் 59 வயது மீனவர் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்.
சியா ஹாப் ஸ்வா என்ற அந்த மீனவரின் உடல் நேற்று காலை 10.45 மணியளவில் பூலாவ் கெத்தாமிலிருந்து தென்மேற்கே 8.1 கடல் மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் கடல்சார் இயக்குநர் கடல்சார் கேப்டன் அப்துல் முஹைமின் முஹமட் சாலே தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்டவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
The post பூலாவ் கெத்தம் கடலில் விழுந்த மீனவர் ; சடலமாக மீட்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

