மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை. அதுபற்றி விரிவாக ஆராய்வோம். இந்தியா கூட்டணிக்கு மாபெரும் வெற்றி வழங்கிய ஜார்க்கண்ட் மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இந்த வெற்றிக்காக முதல்வர் ஹேமந்த் சோரன, அனைத்து காங்கிரஸ் மற்றும் ஜேஎம்எம் தொண்டர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஆதரவளித்த அனைத்து வாக்காளர் சகோதர, சகோதரிகளுக்கு நன்றி. தேர்தலுக்காக உழைத்த கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. வயநாட்டில் உள்ள எனது குடும்பத்தினர் பிரியங்கா மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பிரியங்காவின் மீது வைத்துள்ள நம்பிக்கையால் பெருமை அடைகிறேன். வயநாட்டின் முன்னேற்றத்திற்காக பிரியங்கா கலங்கரை விளக்கம் போல் இருப்பார்.

