கடந்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட 2 தேசியப்பட்டியல்களில் ஒன்றை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்குமாறு குறித்த கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சுதந்திரக் கட்சி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டது. இந்நிலையில் தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியுடன் கலந்துரையாடியுள்ளதாக சுதந்திரக் கட்சியின் தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியில் தேசியப் பட்டியல் குறித்து எழுந்துள்ள நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று (22) கட்சி தலைமையகத்தில் கூட்டமொன்றை நடத்தியது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
The post தேசியப்பட்டியல்களில் ஒன்றை ஸ்ரீ.சு.கட்சிக்கு வழங்குமாறு கோரிக்கை appeared first on Thinakaran.


